சோலையில் அடைக்கலம் புகுந்தான். ஆங்கிலப் படை வீரர்களோ, பிரஞ்சுபடை வீரர்களோ இக்கோவிலுக்கு எவ்வித ஊறும் விளைவிக்காதது மட்டுமன்றி நிலங்களையும் ஆபரணங்களையும் தானமாக கொடுத்தனர் என்று பிரஞ்சுக் காரர்களின் வரலாற்றுக் குறிப்புகள் பரக்கப் பேசுகின்றன. 10. “கரம்பனூரில்” கோயில் கொண்டுள்ள உத்தமனை “தென்னரங்கத்தில்” கண்டேன் என்றார் திருமங்கையாழ்வார். இதற்கு வியாக்கியானம் செய்த பெரிய வாச்சான் பிள்ளை “வழிக்கரையிலே” திருவாசலுக்கு ஒரு கதவிடாதே வந்துகிடக்கிறவனை” என்றார். எல்லோரும் நடந்து செல்லக்கூடிய வழியாக இருப்பதனால் சேவிப்போர் எந்நேரமும் வரலாம் போகலாம் என்று எண்ணி தனக்கு கதவு வைத்துக் கொள்ள அவகாசம் இல்லை என்று கதவிடாதே கிடந்து விட்டான் என்பது மற்றும் ஒரு உரையாசிரியரின் கருத்து. ஒரு காலத்தில் கதவு இல்லாமல் இருந்த இத்தலத்திற்கு இப்போது கதவு உண்டு. 11. இந்த ஆலயத்தில் மகாமண்டபத்தில் பிரமனுக்கு உள்ள கோயிலில் சரசுவதி தேவி எழுந்தருளியுள்ளாள். 12. ஆண்டுதோறும் வரும் கார்த்திகை திருநாளன்று பெருமாளும் சிவனும் சேர்ந்தாற்போல் வீதி உலா வருவார்கள். |