பக்கம் எண் :

609

சொல்வர். தேவலோகத்திற்குச் சமானமான சக்தி இவ்விடத்தில்
பரவியிருப்பதால் தேவப்ராயாகை ஆயிற்றென்றும் சொல்வர்.

     ப்ரயாகைக்கு கிழக்கே உள்ளே பிரதிஷ்டானம் என்ற இடத்தில் உள்ள
தீர்த்தக் கிணறு. வடக்கேயுள்ள வாசுகி என்ற இடம், மேற்கே காம்ப்ளாஸ்
என்னும் சர்ப்பங்கள் உள்ள இடம். தெற்கு திசையில் உள்ள பஹூ மூலம்
என்னும் பகுதி ஆகியன ப்ரயாகையின் எல்லைகளாகும்.

     இந்த தேவப்ரயாகையின் சிறப்பை பற்றி பாத்ம, மத்ஸய, கூர்ம அக்னி
புராணங்கள் பகர்கின்றன.

     கங்கையும், யமுனையும் கூடும் இடமே ப்ரயாகை. மிக ரஹஸ்யமான
தீர்த்தமிது. விதிப்படி இங்கே வசித்துக் கர்மாக்களைச் செய்தால் முற்பிறவியில்
எங்கிருந்தோம் எப்படி இருந்தோம் என்ற ஞானத்தை நமக்கு தரும் என்று
கூர்ம புராணம் கூறுகிறது.

     கங்கையும், யமுனையும், சேருமிங்கு விதிக்கப்பட்டுள்ள முறைகளின்படி
தூய்மையான மனத்துடன் யாகம் செய்பவர்கள் நற்கதி (மோட்சம்)
அடைகின்றனர். என்றும், இங்கே உயிர்விடுபவர்கள் மோட்சம் பெறுகின்றனர்
என்றும் ரிக்வேதம் பகர்கிறது.

     தேவேந்திரன் ப்ரயாகையைப் பாதுகாக்கிறான். இங்குள்ள ஆலமரம் தான்
ப்ரளய காலத்தில் அழியாமல் இருக்குமென்றும் அதனிலையில்தான் பெருமாள்
குழந்தையாக பள்ளிகொள்வார் என்றும் மாத்ஸய புராணம் கூறுகிறது.

     இத்தலத்தைச் சேவிப்பதும், ப்ரயாகையில் நீராடுவதும் ஒவ்வொரு
இந்துவும் செய்ய வேண்டிய கடமையாகும்.

மூலவர்

     நீலமேகப் பெருமாள் (புருஷோத்தமன்) கிழக்கு நோக்கி நின்ற
திருக்கோலம். இப்பெருமாளுக்கும், பிராட்டிக்கும் வேணி மாதவன், விமலா
என்ற பெயரை வடநாட்டு நூல்கள் சூட்டி மகிழ்கின்றன.

தாயார்

     புண்டரீக வல்லி

தீர்த்தம்

     மங்கள தீர்த்தம், கங்கை நதி ப்ரயாகை

விமானம்

     மங்கள விமானம்