பக்கம் எண் :

610

காட்சி கண்டவர்கள்

     பரத்வாஜ முனி, பிரம்மா

சிறப்புக்கள்

     1. பாண்டவர்கள் எதிரிகளைக் கொன்றாலும் அவர்கள் சகோதரர்கள்
அல்லவா, சகோதரர்களைக் கொன்ற பாவத்தைப் போக்க ப்ரயாகையில்
நீராடினால் போதும், ப்ரயாகை சகல பாவத்தையும் போக்கிவிடுமென
மார்க்கண்டேயர் கூற, பாண்டவர்கள் அவ்விதமே செய்தனர் என்பது வரலாறு.

     2. பிரம்மா, இவ்விடத்தில் செய்தயாகத்திற்குப் பின்பே தனது படைக்கும்
தொழில் சக்தியை அதிகரித்துக் கொண்டாராம்.

     3. பரத்வாஜர் இங்கு யாகம் செய்தே, சப்தரிஷிகளுள் ஒருவராக ஆனார்.

     4. ப்ரயாகை யாத்திரை செய்வதாக நிச்சயித்தவுடன் நம் உடம்பில்
இருக்கும் பாவங்கள் எல்லாம் நடுங்குகின்றன.

     5. இவ்விடத்தில் செய்யும் அன்னதானம் மிகவும் சக்தி வாய்ந்தது.
இதற்கொரு கதை உண்டு. சுவேத கேது என்னும் மன்னன் எண்ணற்ற
தர்மங்கள் செய்தும் அன்னதானம் மட்டும் செய்யாதிருந்தான். அதன்
மகத்துவத்தை முனிவர்கள் உணர்த்தியும் அவன் பின்பற்றவில்லை.
அம்மன்னன் இறந்து மேலுலகு சென்ற பின் அவனை பசி வாட்டியது.
இப்பசியை அடக்க தாங்கள் தான் வழிகாட்ட வேண்டுமென்று பிரம்மாவிடம்
விண்ணப்பித்தான். அதற்குப் பிரம்மா, நீ அன்னதானம் செய்யாததால்
உன்னை இங்கு கொடும்பசி வாட்டுகிறது. பூவுலகில் தானம் செய்யாதபொருள்
இங்கு கிடைக்காது. எனவே நீ மண்ணுலகு சென்று பாதுகாப்பாக உனது
சரீரத்தை மிதக்க வைப்பதற்காக நீ வெட்டிய குளத்தில் மிதந்து
கொண்டிருக்கும் உனது சரீரத்தை கத்தியால் அறுத்து அதைப் புசி என்றார்.

     வேறு வழியின்றி சுவேத கேது அவ்வாறே செய்தான். ஆயினும் அவன்
பசி அடங்கவில்லை. அப்போது முனிவரொருவர் ப்ரயாகையில் நீராடு என்று
சொல்ல அவ்விதமே நீராடியும் பயனில்லை.