அப்போது அங்குவந்த அகஸ்தியர் ப்ரயாகையில் அன்னதானம் செய்தால் உன்சாபம் அகலுமென்றார். தேவ சரீரத்தில் நான் அவ்விதம் செய்ய இயலாதே என்று மன்னன் தெரிவிக்க அவ்வாறாயின் கையில் உள்ள யாதாயினும் ஒரு பொருளைக் கொண்டு அதை பிறரிடம் கொடுத்து அன்னதானம் செய்விக்கலாமென கூறினார். தனது தேவ சரீரத்தில் அவ்வாறு கழற்றிக் கொடுக்க அணிகலன்கள் யாதுமில்லையே என்று கூற, நீ செய்த பிற புண்ணியங்களின் பலன்களை திரட்டி கொடு என்று கூற, தான் செய்த தர்மத்தின் பலனையெல்லாம் திரட்டி ஒரு கணையாழி ரூபத்தில் தர அகஸ்தியர் அதனை அங்கிருந்த சீடர்களிடம் கொடுத்து இப்பொருளை விற்று அன்னதானம் செய்யுமாறு கூற அவ்வாறே அன்னதானம் செய்ய சுவேத கேதுவின் கொடும்பசி அகன்று மோட்சம் பெற்றாரென்பர். 6. பெரியாழ்வாரால் 10 பாக்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம். 7. மகாபுண்ணிய தீர்த்தமான இந்த ப்ராயாகையில் பல தீர்த்தங்களும் பல நதிகளும் சங்கமிக்கின்றன. கங்கையும், யமுனையும் கலப்பதோடு அளகநந்தாவும் பாகீரதியும் இங்கு சங்கமிக்கின்றன. ப்ரயாகையில் நீராடும் போது மிகவும் கவனத்துடன் நீராட வேண்டும். வெள்ளப் பெருக்கும் நீரின் விரைவும் இங்கு திடீரென உண்டாகும். 8. இத்தலத்திற்கருகிலேயே ஆஞ்சநேயர், கால பைரவர், மகாதேவர், பத்ரிநாதர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. 9. பிரம்மன், பரத்வாஜர், தசரதன் ஆகியோருடன் ஸ்ரீராமபிரானும் இங்கு தவமியற்றினார். 10. ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமாளை இங்கு ரகுநாத்ஜி என்று அழைக்கிறார்கள். 11. கங்கை, யமுனை, சரஸ்வதி இம்மூன்றும் கூடுமிடம் திரிவேணியாகும். அ.உ.ம. என்ற மூன்று எழுத்துக்களின் சேர்க்கையான ஓங்கார வடிவமானது ப்ரயாக சேத்திரம். அ எழுத்தாகவும், பிரத்யுமனனாகவும் இருக்கிறாள் சரஸ்வதி. யமுனா உ என்ற எழுத்தாகவும், அநிருத்தனாகவும் |