இயற்கையில் மிகத் தொன்மையான அற்புதமான இந்தச் சிருஷ்டியில் நம் முன்னோர்கள் இறைத் தத்துவத்தைக் கண்டது நமது மரபாகும். (நன்றி - தினமணி சுடர், நவம்பர் 26, 1988). இவைகள் அழிந்து பட்டதாக விஞ்ஞானம் கூறினாலும் எதையெதையோ விஞ்ஞானம் கண்டுபிடித்து விளக்கமளித்தாலும், ஆன்மீக நிகழ்வுகளையும் ஆன்மீகத்தின் அளவீட்டினையும், விஞ்ஞானம் இலக்கணம் கூறி விளக்கிவிட முடியாது. இன்றளவும் கண்டகி நதியில் அம்மோனைட்டுகள் (சாளக்கிராமங்களும்) ஏராளமாக உற்பத்தியாகி நேபாளத்து வீதிகளில் விற்கப்படுவது கண்கூடு. |