பக்கம் எண் :

626

     மதுராவில் ஸ்ரீகிருஷ்ணன் பிறந்த சிறைச்சாலை இருந்த இடத்தில்
ஜென்மபூமி என்ற பெயரில் ஒரு புதிய கோவில் கட்டப்பட்டுள்ளது இதுதான்
மதுராவாகும்.

     இத்தலம் பற்றிப் பேசாத வடநூல்களே இல்லையென்று சொல்லலாம்.
ஸ்ரீமத் பாகவதத்தில் முழுக்க முழுக்க மதுரா, கோவர்த்தனம், பிருந்தாவனம்
ஆகிய மூன்றும் பின்னிப் பிணைந்துப் பயின்று வந்துள்ளன. ஸ்ரீகிருஷ்ணன்
பிறப்பிற்கு முன் வாசுதேவர் சிறை வைக்கப்பட்டது. தேவகியின் வயிற்றில்
வரும் 7வது கெர்ப்பத்தில் தனக்கு மரணம் என்பதையறிந்த கம்சன் மற்ற
குழந்தைகளை எல்லாம் கொன்றது, கிருஷ்ணன் பிறந்தவுடன் ஒருத்தி
மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர என்றார் போல்
சிறைச்சாலையில் தேவகிக்குப் பிறந்து அன்று இரவே ஆயர்பாடிக்கு கொண்டு
செல்லப்பட்டு நந்தகோபாலன் வீட்டில் யசோதை மகனாக வளர்ந்தது, அங்கு
லீலா விநோதங்கள் புரிந்து கோபிகைகளின் இல்லங்களிலெல்லாம்
ஆடிக்களித்து, அதன் பின் வாலிபனாகி மீண்டும் மதுரா வந்து கம்சனை வதம்
செய்தது என்று இவ்வாறான வரலாறுகளுடன் துவாரகையில் கண்ணன் புதிய
மாளிகை கட்டிச் செல்லும் வரை உள்ள ஸ்ரீகிருஷ்ணவரலாற்று நிகழ்ச்சிகள்
இந்த மதுராவின் தல வரலாற்றாகப் பேசப்படுகிறது.

மூலவர்

     கோவர்த்தன நேசன், பாலகிருஷ்ணன், கிழக்கு நோக்கி நின்ற
திருக்கோலம்.

தாயார்

     சத்திய பாமா நாச்சியார்

தீர்த்தம்

     இந்திர தீர்த்தம், கோவர்த்தன தீர்த்தம், யமுனா நதி

விமானம்

     கோவர்த்தன விமானம்

காட்சி கண்டவர்கள்

     மதுரா நகர்வாசிகள், கோபாலர்கள், கோபியர்கள், இந்திராதி தேவர்கள்,
வசுதேவர், தேவகி, யசோதை, கம்சன்,

சிறப்புக்கள்

     1. ஒரு காலத்தில் பிரசித்தி பெற்ற வடநாட்டு நகரங்களில் மது என்னும்
ஒரு நகரம் தலைசிறந்து விளங்கியது. அந்நகரை அரசாண்டு வந்த
லவணாசுரன் என்னும் அசுரன் மிகவும்