பக்கம் எண் :

63

மூலவர்

     புண்டரீகாட்சன் (தாமரைக் கண்ணன்) நின்ற திருக்கோலம், கிழக்கே
திருமுக மண்டலம்

தாயார்

     செண்பகவல்லி, பங்கயச் செல்வி, உற்சவருக்கும் பங்கயச் செல்வி
என்றே திருநாமம்.

விமானம்

     விமலாக்ருதி விமானம்

காட்சி கண்டவர்கள்

     சிபி, பூதேவி, மார்க்கண்டேயர் ப்ரஹ்மா, ருத்திரன்.

தீர்த்தம்

     கோவில் மதிலுக்குள்ளேயே 7 தீர்த்தங்கள் உள்ளன.

     1. திவ்ய தீர்த்தம்
     2. வராஹ தீர்த்தம்
     3. குசஹஸ்தி தீர்த்தம்
     4. சந்திர புஷ்கரிணி தீர்த்தம்
     5. பத்ம தீர்த்தம்
     6. புஷ்கல தீர்த்தம்
     7. மணிகர்ணிகா தீர்த்தம்.

சிறப்புக்கள்

     1. வராஹ அவதாரத்தை நினைவுப் படுத்தும் ஷேத்திரம்.

     2. மார்க்கண்டேயரின் வேண்டுகோளின்படி வடநாட்டில் வாழ்ந்து வந்து
3700 ஸ்ரீ வைஷ்ணவர்களை இங்கே கொண்டுவந்து குடியேற்றி கோவிலையுங்
கட்டிப் பெருமாளையும் பிரதிஷ்டை செய்தார் சிபிச் சக்கரவர்த்தி. பிரதிஷ்டை
செய்ததும் ஒரு வைஷ்ணவர் காலமாகிவிடவே மிகவும் மனம் வருந்தினார்.
சிபி. சிபிச் சக்கரவர்த்தியின் வேதனையைத் தீர்க்க பகவான் ஒரு ஸ்ரீ
வைஷ்ணவனின் வேடங்கொண்டு மன்னனிடம் வந்து வேதனைப் படாதே,
என்னையும் சேர்த்தே 3700 என கணக்கிட்டேன் என்று ஸ்ரீவைஷ்ணவர்களின்
மேன்மைக்கு அடையாளமிட்ட திவ்ய தேச