| என்ற இடத்தில் ஒரு கிருஷ்ணன் ஆலயம் உள்ளது. கிருஷ்ணன் வைகுண்டம் போவதற்கு முன் இங்குள்ள அரசமரத்தடியில் சயன திருக்கோலத்தில் இருந்ததாக ஐதீஹம். இன்றும் இந்த இடத்தில் கிருஷ்ணரின் அரசரடி சயன திருக்கோலத்தைக் காணலாம். கிருஷ்ணன் சயனத் திருக்கோலத்தில் இருப்பது அநேகமாக 108 திவ்ய தேசங்களில் இந்த ஒரு இடத்தில் என்று மட்டுமே கூறலாம். துவாரகா புரியை மட்டுமே ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்திருப்பினும் நிகழ்ச்சிகளால் ஒன்றோடு ஒன்றாக பின்னிப் பிணைந்து கிடக்கும் இங்குள்ள ஸ்தலங்கள் யாவற்றையும் மங்களாசாசனம் செய்வதாக கொள்ளலாம். 12. பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், ஆண்டாள் ஆகிய 5 ஆழ்வார்களால் 13 பாக்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம். 13. ஜராசந்தன் என்னும் அரக்கன் மக்களுக்கு பல துன்பங்கள் விளைவித்து வந்த வேளையில் அவனால் மக்கள் துன்பம் அடையாதவாறு உள்ள ஒரு நகரத்தை நிர்மானிக்க வேண்டுமென கடலுக்குள் துவாரகா நகரத்தை சிருஷ்டிக்க கிருஷ்ணன் விஸ்வகர்மாவை யழைக்க அவனால் வடிவமைக்கப்பட்டதே துவாரகாபுரி. இதனால் மிக்க சந்தோஷமடைந்த சமுத்திர ராஜன் இந்நகரைக் காத்து வந்ததாகவும் ஐதீஹம். இந்த துவாரகாபுரி கடல் கோள்களால் விழுங்கப்பட்டு விட்டது. 14. இங்கு செல்பவர்கள் தனி பிரயாணத்திட்டம் வகுத்து சுமார் 6 நாட்கள் வரை தங்கி ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் வாழ்க்கையோடு தொடர்புடைய இடங்கள், பேட்துவாரகை, விராவல் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஸ்தலங்கள் மற்றும் இங்குள்ள ப்ராபஸ தீர்த்தம், ஜீனகட் எனப்படும் ரயில்நிலையத்திலிருந்து 100மைல் தொலைவிலுள்ள கிரிதார் என்னும் ரைவதமலை மற்றும் இங்கு வாழும் பெரியவர்களாலும், பக்தர்களாலும் சொல்லப்படும் முக்கியமான புனித ஸ்தலங்களைத் தரிசித்து, தீர்த்தாடனம் செய்து வருவது மிக்க விசேஷம். 15. கிருஷ்ணன் இந்நகரில் கோபிகா ஸ்திரீகள் புடைசூழ இருந்தமையை, |