பக்கம் எண் :

644

     “பல்லாயிரம் பெருந்தேவி மாரோடு
          பதினாறா மாயிரவர் தேவிமார்
     பணி செய்யத் துவரையென்றும்
          மதிள் நாயகராக வீற்றிருந்த மணவாளர்”

     என்று பெரியாழ்வார் கோடிட்டுக் காட்டுகிறார்.

     16. துவாரகையில் வானளாவும் மாடங்களும் மாளிகைகளும்,
கோவில்களும் நிறைந்திருந்ததை,
 

     “மதிள் துவாராபதியென்றும் மதிள் நாயகராக”
          என்று பெரியாழ்வாரும், “சூட்டுயர்மாடங்கள்
     சூழ்ந்து தோன்றும் துவாராபதியென”
          ஆண்டாளும் படம் பிடித்துக் காட்டுவர்.

     17. இந்திரனது தோட்டத்தில் தேவலோகத்திலிருந்த கற்பக மரத்தை
எம்பெருமான் பூமிக்கு கொண்டுவந்தது இந்த துவாரகாபுரியில்தான்.
சத்தியபாமா கண்ணனிடம் எனக்கு இந்திர லோகத்து கற்பகத்தரு
வேண்டுமென கேட்டாள். கண்ணன் கேட்டதற்கு இந்திரன் கொடுக்க
மறுத்தான். இமைப்பொழுதில் இந்திர லோகம் சென்று கற்பக மரத்தை இங்கு
கொணர்ந்தான். இதனைப் பெரியாழ்வார் தமது பாசரத்தில்,
 

     கற்பகக் காவு கருதிய காதலிக்கு
          இப்பொழு தீவனென் றிந்திரன் காவினில்
     நிற்பன செய்து நிலாத் திகழ் முற்றத்துள்
          உய்த்தவ னென்னைப் புறம் புல்குவான்
     உம்பர் கோனென்னைப் புறம் புல்குவான் 116

     18. கோமதி நதி கடலில் சங்கமமாகும் இடத்தில் அமைந்துள்ள
கிருஷ்ண சாம்ராஜ்யமான இந்த துவாரகாபதி சென்று வந்தவர்கட்கு இங்கு
கண்ட காட்சிகள் வாழ்நாள் முடிய மறக்கவொன்னாதவைகளாகும்.