பக்கம் எண் :

645

105. திருச்சிங்கவேள் குன்றம் (அகோபிலம்)

     மென்ற பேழ்வாய் வாளெயிற்றோர்
          கோளரியாய், அவுணன்
     பொன்ற ஆகம் வள்ளுகிரால்
          போழ்ந்த புனிதனிடம்
     நின்ற பசுந்தீ மொன்டு சூறை
          நீள் விசும் பூடிரிய
     சென்று காண்டற் கரிய கோயில்
          சிங்க வேள் குன்றமே. (1012)
                        பெரிய திருமொழி 1-7-5

     வாளினையொத்த பயங்கரமான பற்களுடன் சிம்மரூபமாகி இரண்யன்
உடலை கூரிய நகங்களால் பிளந்து நரசிம்மன் நின்ற இடம். இங்கு வளரும்
தீ வானத்தில் சென்று இலங்குமளவிற்கு உயரமான மலைகள் நிறைந்த இடம்.
இப்பேர்ப்பட்ட மலையின் மீது காண்பதற்கும் அரிதான இடத்தில்
அமைந்துள்ள சிங்கவேள் குன்றம் என்று திருமங்கையாழ்வாரால்
மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம் சென்னையிலிருந்து பம்பாய் செல்லும்
பாதையில் உள்ளது.

     சென்னை பம்பாய் ரயில்பாதையில் உள்ள கடப்பா என்னும் ரயில்
நிலையத்திலிறங்கி அங்கிருந்து சுமார் 85 கி.மீ. தூரம் உள்ள அர்லகட்டா
என்ற ஊருக்குச் சென்ற பின்னர் அங்கிருந்து அஹோபிலம் செல்லும்
பேருந்துகளில் ஏறி இத்தலத்தை அடையலாம்.

     பெரிய நகரம் என்றும், பெரிய கிராமம் என்றும் சொல்ல முடியாத ஒரு
நடுத்தரமான அமைப்பில் சகல வசதிகளுடன் கூடினதாகத் திகழ்கிறது இத்தலம்.

     இங்குள்ள மலைப்பிராந்தியங்களும், சுற்றிச்சூழ்ந்துள்ள காடுகளும்
பார்ப்பதற்கு ஒருவிதமான பயஉணர்ச்சியை தோற்றுவிக்கும் அமைப்பில்
அமைந்துள்ளது.

     இங்கு மலையடிவாரத்தில் ஒரு கோவிலும், மலையின் மேல் ஒரு
கோவிலுமாக இரண்டு கோவில்கள் உண்டு. மலையடிவாரத்திலிருந்து
மலைமேல் உள்ள கோவில் சுமார் 10 கி.மீ. தூரமாகும். போக்குவரத்திற்கு
பேருந்து வசதிகள்