பக்கம் எண் :

651

தகுந்த துணையுடன் செல்வது அவசியம். பெரும்பாலும் மாலைப் பொழுதுக்குள்
தரிசனம் முடித்துவிட்டு கீழே இறங்கி, பிறகு மறுநாளும் மலைமீதேறி தரிசனம்
முடித்துவிட்டு மாலைப்பொழுதுக்குள் திரும்பி வருமாறு பயணம்
அமைத்துக்கொள்ளலாம். பல்வேறு கோணங்களில் மலைமேல் செல்ல வழிகள்
இருப்பதால் நிதானமாக எல்லா வழிகளையுந் தெரிந்துகொண்டு ஒரு நாளைக்கு
ஒருவழி வீதம் சென்று மலையேறி பெருமாளைச் சேவித்து திரும்பலாம்.

     11. ஆதிசங்கரர் இந்த மலைக்கு விஜயம் செய்தபோது சில காபாலிகள்
அவரைக் கொலை செய்ய முயன்றபோது ஸ்ரீநரசிம்மப் பெருமாளே அவரைக்
காப்பாற்றினார் என்பதோர் வரலாறும் உண்டு.