கோபுரத்தின் நின்றுபோன பணியைத் துவக்கி அதனை ஆசியாவிலேயே பெரிய கோபுரமாக்கி அரங்கனுக்குச் சமர்ப்பித்து அழியாப் புகழ்படைத்து பெருஞ்சாதனை புரிந்துவிட்டார். 8. அழகிய சிங்கர் என்ற பெயரில் இங்குள்ள நரசிம்மனைச் சேவிக்க ஒரு இளைஞர் வந்தார். அப்போது பெருமாளே ஒரு சந்நியாசி ரூபத்தில் வந்து அவருக்கு காட்சி கொடுத்து மந்திர உபதேசம் செய்து அவரைத் துறவறத்தில் சேர்த்து இங்குள்ள ராமானுஜர் சன்னதியிலிருந்து துறவாடையினையும் திரி தண்டத்தையும் கொடுத்து ஸ்ரீசடகோபஜீயர் என்ற திருநாமத்தையிட்டு ஒரு வைணவ ஸ்தாபனத்தை நிறுவுமாறு அருளியதாக ஐதீஹம். அப்போது இந்த ஜீயருக்கு வயது 17. பெருமாளால் ஜீயர் சுவாமிகட்கு உபதேசிக்கப்பட்ட மந்திரத்திற்கு பிரேஷ மந்திரம் என்று பெயர். தான் எந்த உற்சவ மூர்த்தியை வைத்துக்கொண்டு திருவாராதனத்தில் ஈடுபடுவதென்று ஜீயர் பெருமானிடம் வேண்ட பெருமாள் இங்குள்ள உற்சவமூர்த்தியான மாலோல நரசிம்மனை ஜீயரின் கரங்களில் ஒப்படைத்தார் அன்று முதல் தொடர்ந்து வரும் அனைத்து ஜீயர்களும் இந்த மூர்த்தியைத்தான் தாம் செல்லும் இடங்களுக்கு எல்லாம் எழுந்தருளப் பண்ணி, ஆராதனை செய்து வருகின்றார்கள். ஸ்ரீரங்கம் கோபுரத்தை கட்டி முடித்த அழகிய சிங்கர் ஜீயர் திருவரங்கம் வந்தபோது இந்த பெருமாளும் திருவரங்கம் வந்துவிட்டார். 9. அஹோபில மடத்தின் 6வது பட்டத்தை அலங்கரித்த ஸ்ரீஷஷ்ட பராங்குச யதீந்த்ர மகாதேசிகன் என்னும் ஜீயர் இங்குள்ள மலைமேல் உள்ள நரசிம்மன் சன்னதியில் (அகோபில நரசிம்மர்) ஒரு குகையினுள் சென்று இன்னும் தியானத்திலிருப்பதாக ஐதீகம். தற்போது இந்தக் குகை சிமிண்டினால் மூடப்பட்டுள்ளது. அங்கு ஜீயர் சுவாமிகள் சிரஞ்சீவியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது இங்குள்ள பெரியவர்களின் சொல். 10. ஜ்வாலா நரசிம்மன், மாலோல நரசிம்மன், நரசிம்மம் வெளியான தூண் இன்னும் மலைமேல் உள்ள முக்கியமான இடங்கள் ஆகியவற்றைத் தரிசிக்க சுமார் 3 நாட்களாவது தங்கவேண்டும். மலைமேல் உள்ள கோவில்களுக்குச் செல்வது மிகவும் கடினம் என்பதால் |