4. மலையடிவாரக் கோவிலுக்கு முன்பு சுமார் 85 அடி உயரமுள்ள ஒரே கல்லாலான தூண் ஒன்று உள்ளது. இதற்கு ஜெயஸ்தம்பம், வெற்றித்தூண் என்பது பெயர். இது பூமிக்கடியில் சுமார் 30 அடிவரை தோண்டி நிலை நிறுத்தப்பட்டுள்ள தென்ற விபரத்தை அறியும்போது பேராச்சர்யமாக உள்ளது. மிகுந்த பக்திசிரத்தையோடு இந்த தூணின் முன்புறம் எடுத்துக்கொள்ளும் பிரதிக்ஞைகள் (வேண்டுகோள்கள்) வெற்றிபெற்று விடுவதாக ஐதீஹம். 5. திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம். சென்று சேவிப்பது கடினமாக இருப்பதை திருமங்கையாழ்வார் தமது பாடல்களில் குறிப்பிட்டுள்ளார். “சென்று காண்டற்கரிய கோவில் சிங்கவேள் குன்றமே என்றும் செப்புகிறார்”.
| 6. சீதா தேவியைத் தேடிவரும் போது இராமபிரானும் இலக்குவனும் இத்தலத்திற்கு வந்து நரசிம்மனை ஐந்து ஸ்லோகங்களால் அர்ச்சித்து வெற்றிப்பாதையில் சென்றதாக வரலாறு. இப்பெருமானைத் துதித்தவுடன் சீதை கிடைத்துவிட்டதாகவே ராமபிரான் எண்ணிச் சென்றார். 7. அஹோபிலமடம் வைணவசமய வளர்ச்சியில் ஒரு தனிப்பெரும் இடம் வகிக்கிறது. வானமாமலைபோல் திருவரங்கம் போல் திருமலைபோல் வைணவ சம்பிரதாய வளர்ச்சியில் அஹோபிலமடம் முதன்மையும் முக்கியத் துவமும் வகிக்கிறது. அஹோபில மடத்தின் நிர்வாகத்தின் கீழ் எண்ணற்ற கோவில்களும், நூலகங்களும், கல்விக் கூடங்களும் மத சம்பந்தமான ஆய்வுகளும் நடந்து வருகின்றன. அஹோபில மடங்களுக்கு தலைமைப் பீடம் இதுதான். இங்கு தற்போது பெரிய மடங்களும் விசாலமான மண்டபங்களும், உயர்ந்த கட்டிடங்களும் நிறைந்து அஹோபிலம் களைகட்டி நிற்கிறது. வடகலை சம்பிரதாயப்படி இயங்கிவரும் இந்த அஹோபில மடத்தின் ஒவ்வொரு ஜீயர் சுவாமிகளும் ஒரு குறிப்பிடத்தக்கப் பெரும் பணியைச் செய்திருக்கின்றனர். இந்த மடத்தின் அழகிய சிங்க ஜீயர் சுவாமிகள்தான் ஸ்ரீரங்கம் தெற்கு ராய |