பக்கம் எண் :

648

     5. சக்ரவட நரசிம்மன்
     6. பார்க்கவ நரசிம்மன்
     7. ஜ்வாலா நரசிம்மன்
     8. மாலோலா நரசிம்மன்
     9. யோகாநந்த நரசிம்மன்

     2. இங்கு நரசிம்மன் வேடுவனாக வந்து லட்சுமி தேவியை மணந்ததாக
ஐதீஹம். (அதாவது கருடனுக்கு காட்சி கொடுக்கப் பெருமாள் வைகுண்டத்தை
விட்டதும் பிராட்டியும் இவ்விடம் புக்கு வேடுவர் குலமகளாய் அவதாரம்
செய்தனரென்பர்) லட்சுமி தேவி இங்கு செஞ்சுலட்சுமி என்ற பெயரில்
வளர்ந்துவர பெருமாள் வேடனாக வந்து திருமணம் புரிந்தார். வைகுண்டம்
விடுத்து இங்கு வந்து பிராட்டியும் அவதரித்ததை முன்னிட்டு
செஞ்சுலட்சுமியைத் திருமணம் செய்யும்வரை இங்கேயே தங்கிவிட்டதாக
ஐதீகம். பெருமாள் இங்கு வேடர்களுடன் வேடராய் ஆகிவிட்டார் என்றும்
சொல்வர். பெருமாளுக்கு இவ்விடத்து வேடவர் சம்பந்தமிருந்ததை “களைந்த
தீயும் கல்லுமல்லா வில்லுடை வேடருமாய்” என்று திருமங்கை படம்
பிடித்திருக்கிறார்.

     3. இங்கு மலையின்மேல் பாவநாசினி என்னும் நீர்வீழ்ச்சி உள்ளது.
இதன் கரைவழியே மேலே சென்றால் வராஹ நரசிம்மன் சன்னதியைச்
சேவிக்கலாம். இங்கிருந்து மேலும் 1 1/2 மைல் தூரம் சென்றால் மாலோல
நரசிம்ம சேத்திரம் உள்ளது. இங்கிருந்து மேலும் 2 மைல் தொலைவு சென்றால்
ஸ்ரீநரசிம்ம அவதாரம் எடுத்த தூண். நரசிம்மன் தூணிலிருந்து வெளிப்பட்ட
இடம் உள்ளது. இங்கு தகுந்த துணையுடன் செல்ல வேண்டும். அல்லது
பிரம்மோத்ஸவம் நடைபெறும் சமயமான மாசி மாதம் சென்றால் கூட்டமாகச்
செல்லும் பக்தர் குழாத்துடன் செல்லலாம். பொதுவாகவே இங்கு மலைமேல்
உள்ள எல்லா நரசிம்மர்களையும் சேவிப்பது கடுமையான செயலாகும்.
கரடுமுரடான பாதைகள் மட்டுமின்றி செங்குத்தாக மலைமேல் ஏறவேண்டிய
இடங்கள் மட்டுமின்றி காட்டுமிருகங்கள் நடமாடக்கூடிய பகுதிகளும் உண்டு.