பக்கம் எண் :

647

ஜீயர்தான் ஸ்ரீரங்கம் ராயகோபுரத்தைக் கட்டி முடித்தவர்) இந்த உற்சவ
மூர்த்தி தற்போது ஸ்ரீரங்கத்தில் உள்ளார்.

தீர்த்தம்

     இந்திர தீர்த்தம், நரசிம்ம தீர்த்தம், பாபநாச தீர்த்தம், கஜதீர்த்தம்,
பார்க்கவ தீர்த்தம்.

விமானம்

     குகை விமானம்

காட்சி கண்டவர்கள்

     கருடன், அஹோபில மடத்தின் முதலாவது ஜீயர் சுவாமிகளான அழகிய
சிங்கர்.

மலையின் மேல் உள்ள கோவில்

மூலவர்

     அஹோபில நரசிம்மர்

தாயார்

     லட்சுமி

தீர்த்தம்

     பாவநாசினி

விமானம்

     குகை விமானம்

காட்சி கண்டவர்கள்

     பிரகலாதன். கருடன், இங்குதான் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்ததாகவும்
கூறுவர்.

சிறப்புக்கள்

     1. இங்கு மொத்தம் 9 நரசிம்மர் கோவில்கள் உள்ளன. எனவே இதனை
நவநரசிம்ம சேத்திரங்கள் என்றும் வழங்குவர். மலையடிவாரத்திலும், மலையின்
மேலுமாக மொத்தம் 9 நரசிம்மர்கள்.

     1. அஹோபில நரசிம்மன்
     2. வராக நரசிம்மன்
     3. பாவந நரசிம்மன்
     4. காரஞ்ச நரசிம்மன்