| திருமலையில் இருந்து ஒரு சமயம் இராமானுஜர் இறங்கி வரும்போது எதிர்ப்பட்ட ஒரு மூதாட்டி இராமானுஜரைத் தடுத்து எனக்கு மோட்சம் கொடு என்று கேட்க அது என்னால் முடியாதே என்று இராமானுஜர் கூற, உம்மால் முடியாதென்றால் பரவாயில்லை. இந்த மூதாட்டிக்கு மோட்சம் கொடுக்க கடவது என்று ஒரு முறியில் எழுதியாவது கொடுமெனக் கேட்க. ராமானுஜர் ஒரு சிறிய ஓலையில் அவ்விதமே எழுதிக்கொடுக்க அதைப்பெற்ற மூதாட்டி, ராமானுஜரை வழிபட்டு சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று திருமலையில் மழை கொட்டி வெள்ளப் பெருக்கெடுக்க கைகளில் இராமானுஜர் எழுதிக்கொடுத்த ஓலையை இறுகப் பிடித்தவாறு சென்ற மூதாட்டி வெள்ளச் சூழலில் சிக்கி கைகளில் ஓலை பிடித்தவாறே திருநாடு புக்காள். 15. அகத்தியர், வாயு, கபிலர் (இவர் சங்ககாலப் புலவர் அல்ல) சுகமுனிவர் என்னும் பல முனிவர்கள் தவமியற்றிய மலையாகும். இது. 16. தீர்த்த மகிமை மிக்க திருவேங்கடம் திருமலை ஒரு பக்தி சேத்ரம். ஒரு முக்தி சேத்ரம், இதையெல்லாம் விட இதுஒரு மிகப்பெரிய தீர்த்த சேத்ரம் இங்கு 108 தீர்த்தங்கள் உண்டு என புராண நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளன. அரூபமாக, பிரதயட்ச மாகாமல் இருக்கக் கூடிய தீர்த்தங்களும் ஆண்டுக்கொரு முறை இங்குவந்து கூடுகின்றன. சில முக்கியமான தீர்த்தங்களை இங்கு வகைப்படுத்துகிறோம். 1. குமார தாரிகை அல்லது குமார தீர்த்தம் மாசி மாதம் மகம் நட்சத்திரம் வரும் தினத்தன்று (மாசிப்பௌர்ணமி) சகல தீர்த்தங்களும் வந்து இந்த தீர்த்தத்தில் தீர்த்தமாடுகின்றன. மனதிற்கு உற்சாகமும், உடலுக்கு இளமையும் தரும் இத்தீர்த்தத்தில் மூழ்குவோர் ராஜசூய யாகம் செய்த பலனைப் பெறுகின்றனர். 2. தும்புரு தீர்த்தம் பகவானை நாம சங்கீர்த்தனத்தால் பாடும் தும்புரு முனிவர் வேங்கடத்தவனைக் குறித்து தவமியற்றிய இடத்திற்கருகில் இருப்பதால் தும்புரு தீர்த்தம். பங்குனி |