பக்கம் எண் :

67

உருவாக்கிறதென்று நினைத்து பிரம்மதேவனின் 5 தலைகளில் ஒன்றைச் சிவன்
கிள்ளியெறிந்து விட்டார்.

     இதனால் பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்பட்டு, பிரம்மாவின் கபாலம்
(மண்டை ஓடு) சிவபெருமானின் கையில் ஒட்டிக் கொண்டது. அத்துடன் பல
ஸ்தலங்களை தரிசித்து கொண்டு வந்த சிவன் கரம்பனூர் என்னும் உத்தமர்
கோவிலுக்கு வந்த அங்கு மஹா லட்சுமி இட்ட பிச்சையால் கபாலம் நிறையப்
பெற்ற பின் கண்டியூர் செல்லும் வழியில் சிவபெருமான் இத்தலத்தையும் வந்து
வழிபட்டு சென்றார். இவ்வரலாறு கந்த புராணத்திலும் கூறப்பட்டுள்ளது.

     சிவபெருமான் இத்தலத்திற்கு வந்து சென்ற வரலாறு பல நூல்களில்
இல்லாவிட்டாலும் இங்கு கர்ண பரம்பரையாக வழங்கி வரும் செய்தியாகும்.

     இத்தலத்தோடு தொடர்பு கொண்ட பலபுராணங்களிலும் பேசப்படும்
வரலாறு ஒன்று உண்டு. ஒருரிஷியானவர் தண்ணீருக்குள் மூழ்கி தவஞ்
செய்வதில் பெருஞ் சக்தி பெற்று விளங்கினார். இதனால் அவர் மண்டுக
மஹரிஷியென்றே அழைக்கப்பட்டார். இவர் ஒரு சமயம் தவத்தில்
ஈடுபட்டிருக்கும் போது இவரைக் காண வந்த துர்வாச முனிவர் வெகுநேரம்
காத்திருந்தார். ஆனால் மண்டுக மஹரிஷியோ தவத்திலிருந்து மீளவில்லை.
இதனால் தன்னை அலட்சியப் படுத்துவதாகக் கருதிய துர்வாசர் சினந்து
இம்முனிவரை மண்டூகமாகவே (தவளையாக) போகுமாறு சபித்தார்.

     இந்த மண்டுக மஹரிஷி இவ்விடத்தில் தவமிருந்து மஹாவிஷ்ணு
பிரத்யட்சமாகி துர்வாச முனிவரின் சாபத்தை நீக்கினார். இதனால்
இவ்விடத்திற்கு மண்டுக புரி என்ற பெயரும் உண்டு.

மூலவர்

     வடிவழகிய நம்பி, கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்

உற்சவர்

     சுந்தர ராஜன்

தாயார்

     அழகிய வல்லி நாச்சியார்

தீர்த்தம்

     மண்டுக தீர்த்தம் - கொள்ளிடம்