விமானம் தாரக விமானம் காட்சி கண்டவர்கள் சிவன், பிரம்மா, ஊர்வசி சிறப்புக்கள் 1. திருமழிசையாழ்வாரால் மட்டும் தலைப்பில் கொடுக்கப்பட்ட ஒரேயொரு பாடலால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம். 2. இத்தலம் மிகவும் தொன்மையானதாகும். 3. சுந்தர சோழன் தன் எதிரிகளோடு போருக்குச் செல்வதற்கு முன், தனது உடைவாளை இப்பெருமானுக்கு முன் வைத்து வணங்கிச் சென்று போரில் வெற்றி வாகை சூடினான் என்றும், அதற்கு நன்றிக் காணிக்கையாக இத்தலத்திற்கு இறையிலி (ஏராளமான நிலதானம்) செய்ததையும் கல்வெட்டுக்களால் அறிய முடிகிறது. 4. இக்கோவிலின் பிரகாரத்திலும், சுற்று மதில்களிலும், நடை பாதையிலும் கூட ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. 5. இவ்விடம் வால்மீகியின் அவதாரஸ்தலம் என்று ஒரு கருத்து நிலவுகிறது. வால்மீகி தமிழ் நாட்டிலிருந்து சென்றவர் என்று கூறும் ஆராய்சியாளருக்கு இங்குள்ள கல்வெட்டுகள் உதவும். இத்தலத்து எம்பெருமான் வால்மீகிக்கும் காட்சி கொடுத்ததாக அறியும் செய்தியும் வால்மீகிக்கும் இத்தலத்திற்கும் உள்ள தொடர்பை வலுப்படுத்துகிறது. 6. மிகச் சாதாரண நிலையில், சிற்சில பழுதுபாடுகளுடன் விளங்கினாலும், இத்தலம், தொன்மையினாலும், மேன்மையிலும் மிக உயர்ந்ததுதான். |