6. கோவிலடி என்னும் திருப்பேர் நகர்
பேரேயுறைகின்ற பிரான் இன்று வந்து பேரேனேன்று என்னெஞ்சு நிறையப் புகுந்தான் காரேழ் கடலேழ் மலையேழ்லுல குண்டும் ஆராவயிற்றானை அடங்கப் பிடித்தேனே (3745) திருவாய்மொழி 10-8-2 |
என்று நம்மாழ்வாரால் பாசுரஞ் சூட்டப்பட்ட இத்தலம் திருச்சியிலிருந்து
15 மைல் தொலைவில் உள்ளது. அன்பில் திவ்ய தேசத்திலிருந்து கொள்ளிட
நதியின் மறுகரையைச் சேர்ந்தால் இத்தலத்தை அடையலாம். பூதலூர் ரயில்
நிலையத்திலிருந்து சுமார் 8கி.மீ. கல்லணையில் இருந்து 4 மைல்
தொலைவிலும் உள்ளது.
திருப்பேர் நகர் என்றால் யாருக்கும் தெரியாது. கோவிலடி என்று
சொன்னாலே எல்லோருக்கும் தெரியும். இயற்கையின் அரவணைப்பில்
மிகவும் ரம்மியமான சூழ்நிலையில் அமைந்துள்ள அழகான தலமாகும் இது.
புராணம் கூறும் வரலாறு
இத்தலம் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
புராணம் இதனை பலசவனச் ஷேத்திரம் என்று பகர்கிறது. தமிழில்
புரசாங்காடு என்பதையே வட வானர் பலசவனம் என்று எடுத்தாண்டுள்ளனர்.
இவ்விடத்து புரசஞ் செடிகள் இன்றும் அளவு கடந்து பல்கிக் கிளைத்து
சூழ்ந்து வளர்ந்தோங்கிய காட்சியைக் காணலாம்.
உபமன்யு என்னும் மன்னன் துர்வாச முனிவரின் சாபத்தால்
தன்பலமிழந்து போக அதற்கு விமோசனம் வேண்ட இப்பலசவனம்
ஷேத்திரத்தில் லட்சம்பேருக்கு அன்னதானம் அளித்தால் (ததி ஆராதனம்)
சாபந்தீரும் என்று துர்வாசர் தெரிவிக்க இத்தலத்தின் அருகில் ஒரு
அரண்மனையெழுப்பி அன்னதானம் செய்யலானார்.
நீண்டகாலமாக அன்னதானம் தொடர்ந்து நடந்து வருகையில் ஒருநாள்
ஸ்ரீமந்நாராயணனே கிழப்பிராமண வேடங்கொண்டு இங்கு வந்து அன்னம்
கேட்க அவருக்கும் பரிமாறப்பட்டது.
ஸ்ரீமந்நாராயணன் அன்றைய தினம் தயாரிக்கப்பட்ட உணவு
முழுவதையும் உண்டு தீர்க்க “இதென்ன காரியம்” என்று வியந்த மன்னன்
இன்னும் என்ன வேண்டுமென்று கேட்க எனக்கு