பக்கம் எண் :

70

ஒரு குடம் அப்பம் வேண்டுமென்று பெருமாள் சொல்ல அப்பம் செய்து
கொண்டுவரப்பட்டது. அந்த அப்பக் குடத்தை பெருமாள் வாங்கியவுடன்
உபமன்யு சாபம் தீர்ந்ததென வரலாறு.

     இதனால் இப்பெருமானுக்கு “அப்பக்குடத்தான்” என்னும்
பெயருண்டாயிற்று. இப்பெருமானின் வலது கை ஒரு அப்பக் குடத்தை
அணைத்தவண்ணம் உள்ளது.

மூலவர்

     அப்பக்குடத்தான், அப்பால ரெங்கநாதன் புஜங்க சயனம்.

தாயார்

     1. இந்திரா தேவி 2. கமலவல்லி

தீர்த்தம்

     இந்திர தீர்த்தம்

விமானம்

     இந்திர விமானம்

காட்சி கண்டவர்கள்

     உபமன்யு, பராசரர்

சிறப்புக்கள்

     1. இத்தலம் மிகவும் தொன்மை வாய்ந்ததென்றும், ஸ்ரீரெங்கத்திற்கு
முன்னதாக ஏற்பட்டதென்றும் அதனால் தான் கோயிலடி அதாவது ஸ்ரீரங்கம்
கோவிலுக்கு ஆதியாக அடியெடுத்துக் கொடுத்த ஸ்தலமென்பதால் கோவிலடி
என பெயர் பெற்றதாக கர்ண பரம்பரை.

     2. பஞ்ச ரங்கம் என்று சொல்லக்கூடிய ஐந்து அரங்கங்களில் இதுவும்
ஒன்று.

     1. ஆதிரங்கம் - ஸ்ரீரெங்கப்பட்டினம் (மைசூர்)
     2. அப்பால ரெங்கம் - திருப்பேர் நகர்
     3. மத்தியரங்கம் - ஸ்ரீரெங்கம்
     4. சதுர்த்தரங்கம் - கும்பகோணம்
     5. பஞ்சரங்கம் - இந்தளூர் (மாயவரம்)


     இந்த பஞ்சரங்கத்தைப் பற்றி குறிப்பிடும்போது ஸ்ரீரங்கத்தை
மத்தியரங்கம் என்று சொல்லுவதால் 5 இல் மத்திமமான 3வது இடத்தை
ஸ்ரீரங்கம் பெற்றது. எனவே