பக்கம் எண் :

670

ஸ்வாமி புஷ்கரிணி

     தீர்த்தங்களின் அரசி என்று அழைக்கப்படுவதும் சரஸ்வதி தேவி
தவமியற்றியதுமான ஸ்வாமி புஷ்கரிணிக்கு அருகாமையில்தான்
ஆதிவராஹமூர்த்தி எழுந்தருளியுள்ளார். மிக விசேஷமான தீர்த்தமிது.
மார்கழி மாதம் வளர்பிறையில் துவாதசி நாளில் சூர்யோதயத்திற்கு 6 நாழிகை
முன்பிருந்து சூர்யோதயத்திற்கு பிறகு 6 நாழிகை வரை இம்மலையில் உள்ள
தீர்த்தங்கள் யாவும் இதில் கூடுகின்றன. அப்போது இதில் நீராடுவோர்
பூவுலகில் சிறப்புடன் வாழ்ந்து இறுதியில் இறைவன் திருவடியிலும் எப்போதும்
வீற்றிருக்கும் பேறுபெறுவர்.

     தீர்த்த மகிமை மிக்க திருவேங்கடத்தில் சுமார் 40 நாட்கள் தங்கி
அனைத்து தீர்த்தங்களிலும் நீராடி அங்கப்பிரதட்சணம் செய்தும்,
சுப்ரபாதத்தின் போது வேங்கடவனைச் சேவிப்பவர்கள் தெளிவு பெற்ற
மதியினராகவும், பெரும் பொலிவு பெற்ற தோற்றத்தையும் பெற்றவராகின்றனர்
என்பதில் ஐயமில்லை. தீர்த்தாடனம் செய்யும் முறை பற்றியும் ஈண்டு சற்றுச்
சொல்ல விரும்புகிறோம். தீர்த்தாடனம் செய்வதற்கு நித்தியம், நைமித்தியம்,
காமியம் என்ற மூன்று முறைகள் உள்ளன. நாள்தோறும் அதிகாலையில்
நீராடுவது நித்தியம், சூரியனும் சந்திரனும் சேரும் அமாவாசையிலும், சூரியனும்
சந்திரனும் சரிவிகித கோணத்தில் இருக்கும் பௌர்ணமி தினங்களிலும்,
கிரஹண காலங்களிலும், சூரியன் ராசிகளில் பிரவேசிக்கும் மாதப்பிறப்பு
நாள்களிலும், புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது நைமித்தியம். இன்ன
தீர்த்தத்தில் மூழ்கினால் இன்ன பலன் கிடைக்குமென்று எண்ணி அந்தத்
தீர்த்தத்தில் மூழ்குவது காமியம். தீர்த்த யாத்திரையை நைமித்தியமாகச்
செய்வது சிறப்பு. பலன் கருதாது புண்ய தீர்த்தத்தில் நீராடும்போது பகவான்
நாமத்தை உச்சரிக்க வேண்டும். அவ்வாறு செய்யாதவர்கள் தீர்த்தத்திலேயே
கிடப்பினும் தவளையைப் போன்றவர்கள்தான்.

     17. இத்தகைய சிறப்பு பெற்ற இந்த வேங்கடவனை
 

     “ஆடு தாமரையோனும் ஈசனும்”
          அமரர் கோனும் நின்றேத்தும் வேங்கடத்து
     பொன்னை மாமணியை அணியார்ந்த தோர்
          மின்னை வேங்கடத்துச் சியிற் கண்டு போய்”