பக்கம் எண் :

75

     முடித்து வென்றார் என்பதும் கர்ண பரம்பரையான பழங்கால வாய்வழிக்
கதையாகும்.
 

8. ஆடுதுறைப் பெருமாள் கோயில் என்னும் திருக்கூடலூர்

     கூற்றேரு ருவிற் குறளாய் நிலநீ
          ரேற்றா னெந்தை பெருமானூர் போல்
     சேற்றே ருழவர் கோதை போதூண்
          கோற்றேன் முரலுங் கூடலூரே (1361)
                        பெரிய திருமொழி 5-2-4

     என்று திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட இத்திவ்ய தேசம் தஞ்சை
மாவட்டத்தில் உள்ளது. கூடலூர் என்றதுமே அனைவருக்கும் நினைவுரக்
கூடியது மதுரையேயாகும். ஆனால் இந்தக்கூடலூர் அதுவன்று. ஸங்கம
ஷேத்ரம் என்று அழைக்கப்படும் இத்திருக்கூடலூர் தஞ்சை மாவட்டத்தில்
திருவையாற்றிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் உள்ளது. மதுரையை
தென்திருக்கூடலூர் என்றும் இதனை வட திருக்கூடலூர் என்றும் கூறுவர்.

     அதேபோல் ஆடுதுறை என்னும் பெயரும் இன்றைய தஞ்சை
மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து சீர்காழி செல்லும் வழியில்
அமைந்துள்ள ஆடுதுறை என்னும் நகரமன்று. ஏற்கனவே சொன்னது போல்
திருவையாறிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் உள்ள ஒரு சிறிய
கிராமம். இந்த எளிய கிராமத்தின் பெயர் ஆடுதுறை. இங்கு பெருமாளை
எழுந்தருளச் செய்தமையால் “ஆடுதுறைப் பெருமாள் கோயில்” என்றே
வழங்கப்படுகிறது.

வரலாறு

     இத்தலத்தைப்பற்றி பிரம்மாண்ட புராணம், பாத்ம புராணம்,
வடமொழியில் உள்ள கூடற்புராணம் போன்றவைகள் செய்திகளை வாரி
வழங்குகிறது.

     திருமால் வராஹ அவதாரமெடுத்துப் பூமிக்குள் புகுந்தது இந்த இடம்
தான் என்று புராணங்கள் பேசுகின்றன. இதனைத் திருமங்கையின் மேற்படி
பாடலும் சான்று காட்டும். திருமால் பூமியை (இவ்விடத்தில்) பிளந்து
உள்புகுந்து ஸ்ரீமுஷ்ணத்தில் வெளியே எழுந்து அவ்விடத்துத் தம் தேவியைத்
தாங்கி காட்சி தந்தார் என்பர். மஹாலெட்சுமியைக் காக்கும் பொருட்டு வராஹ
அவதாரமெடுத்து ஸ்ரீமுஷ்ணத்தில் தேவியை அணைத்துக் காட்சி