பக்கம் எண் :

76

கொடுத்ததாலும் முதலில் இவ்விடத்தில் பூமியைக் கீறி உள்புகுந்ததால்
திருமங்கை ஆழ்வார் இத்தலத்தைமட்டும் பாடி ஸ்ரீமுஷ்ணத்தைப் பாடாது
விட்டாரென்றும் ஆன்மீக ஆய்வாளர் கூறுவர்.

     ஒரு சமயம் அம்பரிஷன் என்னும் ஒரு மன்னன் மிகச்சிறந்த திருமால்
பக்தனாகி மன்னர் பதவியை துறந்து மகரிஷி ஆனான். கடும் தவம்
புரிவதிலும், கடுமையான விரதங்களைக் கடைப் பிடிப்பதிலும் அம்பரிஷன்
தேவர்களிலும் சிறந்தவனாக விளங்கினான்.

     அம்பரிஷியின் தவநிலையைச் சோதிக்க துருவாச முனிவர்
அம்பரிஷியின் குடிலுக்கு வந்து அவரது ஏகாதசி விரதத்தின் பலனைக்
கொடுக்குமாறு கேட்டார். துருவாசர் வந்திருப்பதையும் பொருட்படுத்தாது
தனது விரதத்திலேயே அம்பரிஷி மூழ்கியிருந்தார். ஏகாதசி முடிந்து துவாதசி
வந்துவிட்டது. அப்போதும் ஸ்ரீமந் நாராயணன் நினைவாக தவத்தில்
ஆழ்ந்துவிட்டார். அம்பரிஷி.

     தன்னைச் சற்றும் மதிக்காத நிலையைக் கண்ட கோபகுணம் கொண்ட
துர்வாசர் அம்பரிஷிக்கு சாபம் கொடுக்க அம்பரிஷி மகாவிஷ்ணுவை
துதித்தார். மஹா விஷ்ணு துர்வாசர் மீது தனது சக்ராயுதத்தை ஏவினார்.
சக்ராயுதத்தை எதிர்த்து நிற்க முடியாத துர்வாசர் சக்ராயுதத்தை சரண்
அடைந்து எம்பெருமானின் அடியார்களுக்கு அபச்சாரம் விளைவித்த தனது
குணத்தை நொந்து தன்னைக் காப்பாற்றுமாறு மஹாவிஷ்ணுவை வேண்ட
சக்ராயுதத்தை திருப்பிப் பெற்ற மஹாவிஷ்ணு துர்வாசரை மன்னித்தது
இத்தலத்தில்தான்.

     பிறகு திருமாலின் வேண்டுகோளின்படி பொன்னியாற்றின் கரையில்
திருக்கோயில் எழுப்பி நீண்டநாள் வழிபட்டு பரகதியடைந்தான்.
அம்பரிஷனுக்கு அருளியதால் அம்பரிஷ வரதரென்றும் வையங்காத்த
பெருமானென்றும் இங்கு பெருமாளுக்குத் திருநாமம் ஏற்பட்டது.

     இந்த அம்பரிஷனால் கட்டப்பட்ட கோயில் இப்போது இல்லை.

     ஒரு சமயம் பொன்னியில் வெள்ளப்பெருக்கு உண்டாகி அதன்
கரையிலிருந்த (காவேரிப் பிரளயம் என்றும் இதனைக் கூறுவர்) இக்கோவில்
இருந்த இடம் தெரியாமல் அழிந்து மண்மேடாகிவிட்டது. மூலவரும் உற்சவரும்
தாயாரும், இதர விக்ரஹங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு
விட்டன.

     கோபுரத்தையும், மதில்களையும், இதர விக்ரஹங்களையும் வெள்ளம்
இடித்துச் சென்றாலும் மூலவர், உற்சவர், தாயார் மட்டும்