பக்கம் எண் :

77

பொன்னியின் போக்கில் சென்று ஒருபுறம் ஒதுங்கி நிற்க, மீன் வேட்டைக்குச்
சென்று வந்த பரதவர் வலையில் சிக்கி அவர்களால் எடுத்துச் செல்லப்பட்டு
அவர்களின் சேரியில் அமர்ந்தனர்.

     வெள்ளம் வடிந்து வானம் வெறிச்சோடிய சில தினங்களில் மதுரையில்
நிலாமுற்றத்தில் தூங்கிக் கொண்டிருந்த ராணி மங்கம்மாளின் கனவில்
மஹாவிஷ்ணு தோன்றி ஆற்றங்கரையில் ஒதுங்கிச் சேரியில் இருக்கும் தமக்கு
கோவில் கட்டுமாறு கேட்டுக்கொள்ள தனது தளபதி கிருஷ்ணராஜு
நாயக்கருடன் படை பரிவாரத்துடன் தஞ்சைத் தரணி நோக்கிப் புறப்பட்டு
அழிந்த கோவிலைப் பார்வையுறுங்கால், சேரித் தலைவன் மீனவன் ராமன்
என்பான் ஓடிவந்து இறைவன் தமது சேரியிலிருப்பதை தெரிவிக்க, ராஜ
மரியாதையுடன் வழிபாடியற்றி அவைகளைப் பெற்றுக் கொள்ள எவ்விடத்தில்
கோவில் கட்டுவதென்ற ஐயம் எழ, சேரிக்கருகாமையில் பேரொளி தோன்றி
அது ஓரிடத்தில் நிலைத்து நின்று மறைய இறைவனும் குறிப்பால்
உணர்த்தினான் என்றே நினைத்து அவ்வொளி தோன்றிய இடத்தில்
(ஆடுதுறை கிராமத்தில்) ராணி மங்கம்மாவினால் இப்போதுள்ள கோவில்
 கட்டப்பட்டது எண்ணற்ற தான தர்மங்களுடன் பெருஞ்சிறப்பான வழிபாடுகள்
இக்கோவிலில் நடைபெற்று வந்தன. ஆனால் இன்றோ இக்கோவில்
மின்விளக்கு கட்டணம் கட்ட வசதியற்றமையினால் வெளிச்சம் அற்ற
நிலையில் பக்தர்களின் வருகைக்குறைவால் பராமரிப்பும் இல்லாது ஏற்கனவே
ஏற்பட்ட மாற்றம் போல் புராணப் பெருமையை மட்டும் தாங்கிக்கொண்டு
கிராமத்தோடு கிராமமாக முடங்கிக் கிடக்கிறது.

     சேரியிலிருந்து கொண்டுவரப்பட்ட உற்சவரும் தாயாரும் மட்டும்தான்
இக்கோவிலில் உள்ளனர். மூலவர் அருகில் உள்ள வழுத்தூர் என்னுமிடத்தில்
வைக்கப்பட்டுள்ளார்.

மூலவர்

     வையங்காத்த பெருமாள் (ஜெகத்ரட்சகன்) உய்யவந்தார் என்னும்
திருநாமம் நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார்

     பத்மாசனி, புஷ்பவல்லி.

உற்சவர்

     மூலவருக்கு உள்ள பெயர்களே