பக்கம் எண் :

78

தீர்த்தம்

     சக்கர தீர்த்தம், இந்திர தீர்த்தம், காவேரி நதி

விமானம்

     சுத்தஸ்தவ விமானம்

காட்சி கண்டவர்கள்

     அம்பரிஷி, நந்தக முனிவர், காவேரி

சிறப்புக்கள்

     1. மும்மூர்த்திகளில் திருமாலை, காலால் உதைத்த பிருகு முனிவர்
மஹாவிஷ்ணுவே பொறுமையின் சிகரம் என்பதை உணர்ந்து தாம் செய்த
பாவத்திற்குப் பிராயச்சித்தம் தேடும் முகத்தான் மஹாலெட்சுமியே தனக்கு
மகளாக வரவேண்டுமென்றும், அவரை வளர்த்து தம் பாவம் போக்கி மீண்டும்
திருமாலுக்கு அளிக்கவேண்டும் என்று இத்தலத்தில் தவமிருந்து அது
நிறைவேறியதாக ஐதீகம். எனினும் இது ஆய்வுக்குரிய விஷயம் (இதே
கதைதான் கும்பகோணத்திலும்)

     2. நந்தக முனிவரோடு தேவர்கள் கூட்டம் கூட்டமாய் வந்து
வழிபட்டமையால் இதற்கு கூடலூர் என்று பெயர் ஏற்பட்டதாகக் கூறுவர்.

     3. சஷயம் (காசம்) என்னும் கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட
சந்திரன் (நவக்கிரகங்களின் ஒருவன்) இத்தலத்தில் பெருமாளை
நோக்கித்தவமிருந்து நோய் நீங்கப் பெற்றான் என்பதும் புராண வரலாறு.

     4. ஒரு சமயம் புண்ணிய நதிகள் எல்லாம் தம்மில் பலரும் நீராடி
பாவக்கறை மிகுந்து போயிருப்பதைப் போக்கும் பொருட்டு பிரம்ம
லோகத்திற்குச் சென்று பிரம்மனிடம் முறையிடும்போது காவேரியின்
அலங்கோல நிலையைக் கண்டு அனைவரும் எள்ளி நகையாட பிரம்மனால்
ஆற்றுப்படுத்தப்பட்டு தனது அவலத்தை இப்பெருமானிடம் தவமிருந்து காவிரி
போக்கிக் கொண்டாள் என்பது ஐதீகம்.

     5. திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாசுரங்களில் மங்களாசாசனம்
செய்யப்பட்ட ஸ்தலம். வராஹ அவதாரம் எடுத்தப் பெருமாள் இங்கு
புகுந்ததை குறிக்கும் முகத்தாண், தமது