பாக்களில் புகுந்தானூர், புகுந்தானூர் என்றே அவ்வவதாரத்தை மறைமுகமாக குறிக்கிறார். மேலே எடுத்தாண்டுள்ள பாடலில் வராஹ அவதாரத்தை இத்தலத்தோடு வெளிப்படையாகவே உணர்த்துகிறார். 6. அம்பரிஷன் ரதம் என்று பெயர் பெற்ற பிரம்மாண்டமான ரதம் ஒன்று இங்கு இருந்ததாகவும், ராணி மங்கம்மாவால் அந்த ரதம் புதுப்பிக்கப்பட்டு நெடுங்காலம் புழக்கத்தில் இருந்ததாகவும், சமீப காலமாக சுமார் (60 வருடங்களாகத் தான்) இந்த ரதம் அழிந்து பட்டதெனவும் கூறுவர். 7. ஏற்கனவே பொன்னியின் கரையிலிருந்து அழிந்துபட்ட திருக்கோயில் இன்றைய ஆடுதுறைப் பெருமாள் கோயிலில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் மண் மேடிட்டு உள்ளது. இப்பகுதியை “பெருமாள் பொட்டல்” என்றே இப்பகுதி மக்கள் இன்றும் அழைக்கின்றனர். 8. ராணி மங்கம்மாளுக்கு இக்கோவிலில் சிலையெடுக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் மதில் சுவர் மிக நீண்டு அதிக உயரமானதாக, காண்போரை பிரமிக்கச் செய்யும் வகையில் இன்றும் நின்று நிலவுகிறது. இக்கோவிலின் உட்புற மதில்சுவரில் இருக்கும் கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டு தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. 9. ஆஞ்சநேயர் ஒரு சமயம் விண்வெளியில் சென்று கொண்டிருக்கும்போது இக்கோவிலில் இருந்த ஜனத் திரளைக் கண்டு வியந்து, இது என்னவென்று பார்க்க வந்தவர், தனது தெய்வம் ஸ்ரீராமருக்கே மக்கள் இங்கு வழிபாடு எடுக்கிறார்கள் என்று தாமும் அவர்களோடு கலந்து ஆனந்தக் கூத்தாடி மூர்ச்சித்துக் கிடக்க, ஒளிமயமாக பெருமாள் ஆஞ்சநேயருக்கு காட்சி கொடுத்தாராம். இதன் நினைவாகவே இக்கோவிலின் முன் கூத்தாடும் பாவனையில் ஆஞ்ச நேயருக்கு இன்றும் ஒரு சிறிய கோவில் உள்ளது. 10. இந்தக் கூடலூர் சோலையில் ஒரு தென்னை மரத்தில் வாழ்ந்து வந்த கிளியொன்று தினமும் ஒரு நாவல் பழத்தைக்கொண்டு வந்து பெருமானுக்குச் சமர்ப்பித்து விட்டு ஹரி, ஹரி என்றும் கூவும் பழக்கம் கொண்டிருந்தது. ஒரு நாள் அவ்விதமே நாவல் பழத்துடன் ஹரியின் பூசைக்கு வந்துகொண்டிருக்கும்போது வேடன் ஒருவனால் எய்யப் |