பக்கம் எண் :

80

     பட்ட அம்பால் கழுத்தறுபட்டுத் தரையில் வீழ்ந்து துடிக்க, அதை
எடுக்க வந்த வேடன் அக்கிளியைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் இருப்பதைக்
கண்டு பயந்து ஓடிப்போக, தன் உயிர் பிரியும் தருவாயில் கூட அக்கிளி ஹரி,
ஹரி என்றே முனக, இறுதியில் அக்கிளிக்கு திருமால் காட்சி கொடுத்து நீ
முன்பிறவியில் வித்யா கர்வத்துடன் அனைவரையும் இகழ்ந்து பேசவே
இப்பிறவியில் எனது பெயரை மட்டும் சொல்லிக்கொண்டே திரியும் கிளியாக
ஆனாய். வேடனின் அம்பு பட்டதும் நினது பூர்வ ஜென்ம பாபம்
தொலைந்தது என்றதும் ஜோதிமயமான மானிட உருப்பெற்று இறைவனுடன்
அக்கிளி கலந்த காட்சியை எண்ணற்ற மக்கள் கண்டு ஹரி, ஹரி, ஹரி என்று
விண்ணைப் பிளக்க கோஷமிட்டனர் என்று புராணங் கூறும்.