பக்கம் எண் :

81

9. திருக்கவித்தலம் (கபிஸ்தலம்)

     கூற்றமும் சாரா கொடுவினையும் சாரா, தீ
          மாற்றமும் சாரா வைகயறிந்தேன் - ஆற்றங்
     கரைகிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும், மாயன்
          உரைக் கிடக்கு முள்ளத் தெனக்கு (2431)

     என்று இத்தலத்தில் பள்ளிகொண்ட இறைவனை ஆற்றங்கரை கிடக்கும்
கண்ணன் என்று திருமழிசை ஆழ்வார் இப்பெருமானின் பெயரைக் குறித்து
மங்களாசாசனம் செய்ததால் மங்களாசாசனம் பெற்றது இத்தலம்.
தஞ்சையிலிருந்து திருவையாறு வழியாக கும்பகோணம் செல்லும் பாதையில்
உள்ளது. இவ்வழியில் 4 திவ்ய தேசங்கள் உள்ளன. பாபநாசம் ரயில்
நிலையத்திலிருந்து சுமார் 2 மைல் தூரத்தில் உள்ளது.

     இத்தலத்தைப் பற்றி விஷ்ணு புராணம் கீழ்க்காணும் வரலாற்றைக்
கூறுகிறது.

     முன்னொரு காலத்தில் இந்திராஜு ம்னன் என்னும் மன்னன் மிகச் சிறந்த
விஷ்ணு பக்தனாக இருந்தான். விஷ்ணு பக்தியில் ஈடுபட்டு அவன் பூசையில்
ஒன்றியிருக்கும்போது இவ்வுலகம் மறந்த நிலையில் இருப்பான். அது போழ்து
தம்மைக் காண்பதற்கு யார்வரினும் அவரைக் காண்பதுமில்லை. அவர்களை
ஒரு பொருட்டாக கருதுவதுமில்லை.

     இவ்விதம் பக்தியில் ஈடுபட்டிருந்த ஒரு தினத்தில் துர்வாச முனிவர்
அவனைக் காண வந்தார். வெகு நாழிகை கழித்தும் இந்திராஜு ம்னன் தனது
பக்திக் குடிலைவிட்டு வெளிவந்த பாடில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த
துர்வாசர் இறுதியில் குடிலுக்குள் நுழைந்து அம் மன்னன் முன்னிலையில்
போய் நின்றார். இந்நிலையிலும் சற்றும் கண்திறந்து பாராது பக்தியிலேயே
லயித்திருந்தான் இந்திராஜு ம்னன் மிகவும் சினங்கொண்ட முனிவர் உரத்த
குரலில் சாபமிட்டார்.

     நீ மிகவும் கர்வம் உள்ளவனாகவும், பக்தியில் சிறந்தவன் என்ற மமதை
அதிகமிருப்பதாலும், நீ விலங்குகளிலேயே மதம் பிடித்த யானையாகக் கடவாய்
என்று சபித்தார்.

     நிலையுணர்ந்த மன்னன் தன் தவறறிந்து மன்னிப்பும் கேட்டு
சாபவிமோசனம் வேண்டி நின்றான். சினந்தணிந்த முனிவர் நீ யானையாக
இருந்தாலும் அப்போதும் திருமால் மீது பக்திகொண்ட கஜேந்திரனாகத்
திகழ்வாய். ஒரு முதலை உன்