காலைக் கவ்வ நீ மஹாவிஷ்ணுவை யழைக்க உனக்கு மோட்சம்மும் சாபவிமோசனமும் உண்டாகுமென்றார். இவ்வாறிருக்க கூஹு என்னும் அரக்கன் ஒருவன் தண்ணீரில் மூழ்கிக் குளிப்போரின் காலைப்பிடித்து இழுத்து துன்புறுத்துவதையே தொழிலாகக் கொண்டிருந்தான். ஒரு நாள் அகத்தியர் குளித்துக் கொண்டிருக்கும் போது அவரின் காலைக் கவ்வினான். சினமுற்ற அகத்தியர் நீ ஒரு முதலையாகக் கடவாய் என்று சபித்தார். அவனும் விமோசனம் வேண்ட நீ கஜேந்திரன் என்னும் யானையின் காலைக்கவ்வும் காலம் வரும்போது திருமாலின் சக்ராயுதம் பட்டு சாபவிமோசனம் உண்டாகுமென்றார். இந்தக் கபிஸ்தலத்தில் உள்ள கோவிலின் முன்பு (கிழக்கு திசையில்) அமைந்துள்ள கபில தீர்த்தம் என்னும் குளத்தில் ஒரு நாள் கஜேந்திரன் நீரருந்த இறங்கும்போது முதலை கவ்வ, யானை பிளிற, கருட வாகனத்தில் வந்த மகாவிஷ்ணு தம் சக்ராயுதத்தால் முதலையைக் கொன்று யானைக்கு மோட்சமளித்ததாக வரலாறு. “மூலமே யென்ற கரிமுன் வந்திடர் தொலைத்து நீலமேகம் போல் நின்றான்” | என்பது பிள்ளைப் பெருமாளையங்காரின் வாக்கு. மகாபாரதம் இத்தல வரலாற்றைப் பற்றி கீழ்க்கண்டவாறு கூறுகிறது. கூற்றுரல் கராவின் வாயின்றழைத்த குஞ்சர ராஜன் முன் அன்று - தோற்றிய படியே தோற்றினான் - முடிவும் தோற்றமும் இலாத பைந்துழவோன்” | என்பது பாரதம். குஞ்சரம் என்றால் யானை, கரா என்றால் முதலை. மூலவர் கஜேந்திர வரதன், புஜங்கசயனம், கிழக்கே திருமுக மண்டலம். தாயார் ரமாமணவல்லி (பொற்றாமரையாள்) விமானம் ககநாக்ருத விமானம் |