தொடக்கம் |
|
|
8. பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் 41. பொய்யடிமை யில்லாத புலவர் புராணம் |
1. | 'செய்யுள் நிகழ் சொல் தெளிவும் செவ்விய நூல் பல நோக்கும் மெய் உணர்வின் பயன் இதுவே' எனத் துணிந்து விளங்கி ஒளிர் மை அணியும் கண்டத்தார் மலர் அடிக்கே ஆள் ஆனார் பொய் அடிமை இல்லாத புலவர் எனப் புகழ் மிக்கார். |
|
உரை
|
|
2. | பொற்பு அமைந்த அரவு ஆரும் புரிசடையார் தமை அல்லால் சொல் பதங்கள் வாய் திறவாத் தொண்டு நெறித் தலைநின்ற பெற்றியினில் மெய் அடிமை உடையார் ஆம் பெரும் புலவர் மற்று அவர் தம் பெருமையார் அறிந்து உரைக்க வல்லார்கள். |
|
உரை
|
|
3. | ஆங்கு அவர் தம் அடி இணைகள் தலை மேல் கொண்டு அவனி எலாம் தாங்கிய வெண்குடை வளவர் குலம் செய்த தவம் அனையார் ஓங்கி வளர் திருத்தொண்டின் உண்மை உணர் செயல் புரிந்த பூங் கழலார் புகழ்ச் சோழர் திருத்தொண்டு புகல்கின்றாம். |
|
உரை
|