11. பத்தராய்ப் பணிவார் சருக்கம்
60. பரமனையே பாடுவார் புராணம்
1.புரம் மூன்றும் செற்றானைப் பூண் நாகம் அணிந்தானை
உரனில் வரும் ஒரு பொருளை உலகு அனைத்தும் ஆனானைக்
கரணங்கள் காணாமல் கண் ஆர்ந்து நிறைந்தானைப்
பரமனையே பாடுவார் தம் பெருமை பாடுவாம்.
உரை
2.தனெ் தமிழும் வட கலையும் தேசிகமும் பேசுவன
மன்றின் இடை நடம் புரியும் வள்ளலையே பொருள் ஆக
ஒன்றிய மெய் உணர் வோடும் உள் உருகிப் பாடுவார்
பன்றியுடன் புள் காணாப் பரமனையே பாடுவார்.
உரை