11. பத்தராய்ப் பணிவார் சருக்கம்
62. திருவாரூர்ப் பிறந்தார் புராணம்
1.அருவாகி உருவாகி அனைத்தும் ஆய் நின்ற பிரான்
மரு ஆரும் குழல் உமையாள் மணவாளன் மகிழ்ந்து அருளும்
திரு ஆரூர்ப் பிறந்தார்கள் திருத் தொண்டு தெரிந்து உணர
ஒரு வாயால் சிறியேன் ஆல் உரைக்கலாம் தகைமை அதோ.
உரை
2.திருக் கயிலை வீற்று இருந்த சிவபெருமான் திருக் கணத்தார்
பெருக்கிய சீர்த் திருவாரூர்ப் பிறந்தார்கள் ஆதலினால்
தருக்கிய ஐம் பொறி அடக்கி மற்று அவர்தம் தாள் வணங்கி
ஒருக்கிய நெஞ்சு உடையவர்க்கே அணித்து ஆகும் உயர் நெறியே.
உரை