12. மன்னிய சீர்ச் சருக்கம் 71. சடைய நாயனார் புராணம்
1.
தம்பிரானைத் தோழமை கொண்டு அருளித் தமது தடம் புயம் சேர் கொம்பனார் பால் ஒரு தூது செல்ல ஏவிக் கொண்டு அருளும் எம்பிரானைச் சேரமான் பெருமாள் இணைஇல் துணைவராம் நம்பி ஆரூரைப் பயந்தார் ஞாலம் எல்லாம் குடிவாழ.