48அருஞ்சொற்றொடரகராதி

முன் சேர்க்கை - 1
சிவமயம்
நான்காம் பகுதியின் முன்னுரையின் முற்பகுதி
 
"நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப்
 பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச்
 சீயேது மில்லாதென் செய்பணிகள் கொண்டருளுந்
 தாயான வீசற்கே சென்றூதாய் கோத்தும்பீ"
- திருவாசகம்
     மூன்றாம் பகுதி இரண்டாம் பாகம் நிறைவாகி வெளிவந்து சில மாதங்களே ஆயின. அதனுடன் திருநின்ற சருக்கமும், புராணம் - முதற் காண்டமும் நிறைவாயினமை அன்பர்கள் அறிவார்கள். அதன்முன்னுரையில் முதற் காண்டமாவது நிறைவேறி வெளி வருதல் காண்போமா? என்று ஏங்கி எண்ணமிட்டிருந்த எனது கருத்தை வெளியிட்டெழுதினேன்; அவ்வளவில் திருவருள் புரிந்த இறைவர் திருவடிகளுக்கு வணக்கமும் செலுத்தினேன்; இனி இப்போது அதன்மேல் இரண்டாங் காண்டமும் தொடங்கப்பெற்றுத் திருஞானசம்பந்த நாயனார் புராணமுதற் சஞ்சிகை இதனுடன் வெளிவருகின்ற நிலையினையும் கைகூடும்படித் திருவருள் கூடிற்று; அதற்கு "மீளா வாளலாற் கைமா றில்லை" என்றபடி என்றும் மறவாது அடிமைபூண்டு ஆட்செய்வதைத் தவிர வேறு என்செய்ய வல்லேன்?; இதுபோலவே இப்புராணத்தை அடியேன் முடிக்க எண்ணியுள்ள ஏனை எல்லாச் சஞ்சிகைகளையும் விரைவில் வெளியிடத் திருவருள் துணை செய்யுமாக. அவற்றுக்குரிய கை எழுத்துப் பெரும்பான்மையும் எழுதி அச்சுக்குச் சித்தமாயிருக்கின்றன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதனை இரு பகுதிகளாக இரண்டு அச்சகங்களில் ஒரு சேர அச்சேற்றினால் இந்த ஆண்டு நிறைவுக்குள் ஆளுடைய பிள்ளையார் புராண முழுமையும் வெளிவரக் கண்டு களிக்கலாம். ஆனால் இதற்கு வேண்டப்படும் அதத்தனை அளவு காகிதங்களைப் பெறவோ, அசசின் நிலைகளை அமைத்து உதவவோ உரிய அன்பர்களைக் காணேன். 1935-ம் அண்டில் இத்திருப்பணியின் தொடக்கம் என் மேலதாயிற்று. இப்பொழுது பன்னிரண்டு ஆண்டுகள் நிறைவெய்தலாகிய பருவம்; இதனுள் புராண உரை முழுதும் வெளிவந்திருத்தல் வேண்டும் ஆனால் என்செய்வது?; பல்லாவற்றானும் எனது தகுதியின்மை ஒரு காரணம்; கருவியின் குறைவு காரியக்கேடு தருமன்றோ?அறிவின்மை, ஆற்றலின்மை, நோய், மூப்பு, மந்தகுணம், நெடுநீர்மை என்றின்ன பலவும் அடியேன்பால் நிறைவாயினபோது இவ்வளவி வேனும் உரை நிறைவேறிற்றே என்று அன்பர்கள் மகிழவேண்டும். இவ்வெளி யீட்டுக்குரிய பொருட்பேறுபற்றி அடியேன் வருந்தவில்லை. ஆனால், முன்குறித்தவாறு மனம் மொழி மெய்களால் இப்பணியில் அடியேனது முயற்சிகளை ஊக்குவித்துத் துணைபுரியும் அன்பர்களின் கூட்டுறவாகிய பேறே அடியேன் பெற விரும்புவது. இடையில் உலகப் பெரும் போரும் அது காரணமாக நேர்ந்த