திருத்தொண்டர் புராணமும் - உரையும் | 49 |
| இன்னல்களும் இடையூறுகளும் பல; காகிதப் பஞ்சம், அச்சுக்குரிய பொருள்கள் கிடையாமை, தடைகள் முதலியவை இம்முயற்சியை நலிவுறுத்தின. | இனித் திருஞானசம்பந்த நாயனார் புராணத்தைச் சஞ்சிகை 1-க்கு 100பாட்டளவில் பன்னிரண்டு சஞ்சிகைகளாக வகுத்து வெளியிட எண்ணியுள்ளேன். அவை சீகாழிப் பன்னிரண்டு திருப்பெயர்களுள் அம்முறையில் வரும் ஒவ்வொரு பெயரால் விளங்கும்; ஒவ்வொரு சஞ்சிகையும் ஒவ்வோர் தனி உட்கிடையைக் கொண்டு விளங்குதல், ஊன்றிப் பார்ப்போருக்கு விளங்காமற் போகாது; இச்சஞ்சிகை தனி வெளியீடாக வருதலின், சரிதச்சுருக்கம், கற்பனை முதலிய அட்டவணைகள் தரப்பட்டுள்ளன. | இனி, இப்புராணம் இவ்வெளியீட்டின் நான்காவது ஐந்தாவது பகுதிகளாக வெளிவருவதால் அமைவாகும் என்று நினைக்கின்றேன்; இதனை அச்சிடத் தொடங்கும்போது திருக்கயிலாய பரம்பரைத் தருமபுரவாதீனம் 25-வது பட்டத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய ஞானசம்பந்த தேசிக பண்டார சந்நிதி அவர்களிடம் இது பற்றிப் பேச நேர்ந்தது; அவர்களது ஆதீனத் தனி வெளியீடாகத் திருநாவுக்கரசு நாயனார் புராணம் முழுமையும் வெளி வந்தமை அன்பர்கள் அறிவார்கள். திருஞானசம்பந்த நாயனார் புராணத் தொடக்கத்தில் அவ்வாதீனத் தொடர்பு இருத்தல் பொருத்தமும் தகுதியுமாம் என்று அவர்களிடம் விண்ணப்பித்தபோது சிறிதும் தாழ்க்காது "முதற் சஞ்சிகை முதற்றிருப்பதிக நிகழச்சி முழுதும் சீகாழிப்பதியின் திருக்கோயில் வெளியீடாக ஆகுக!" என்று கட்டளையிட்டுப் புன்முறுவலுடன் ஆசி புரிந்து ஆவனவற்றை எல்லாம் செய்தருளினார்கள். அவர்கள் புரிந்த கருணைத் திறத்திற்கு அடியேன் கடப்பாடுடைய மனமார்ந்த நன்றி செலுத்துகின்றேன்; அவர்கள் அதனோடு இதற்குரிய படங்களையும் எடுத்து உதவியருளினார்கள். அவர்களது அருளாணை திருவருட் சம்மதமான பொருத்தமுடைய தென்பது கண்கூடாக யாவரும் தெரியத்தக்கதாகும். | இனி, இவ்வெளியீட்டினாலும், இதற்குமுன் எல்லா வகையாலும் உதவிய எல்லா நண்பர்களும், பெரியார்களும் முன்போல உதவி புரிந்து வருகின்றார்கள். சென்னை, இராவ்பகதூர் திரு. வ. சு. செங்கல்வராய பிள்ளை, எம். ஏ., அவர்கள் முன் புரிந்துவந்த உதவிகளோடு ஒரு புரூபும் பார்வையிட்டு அவர்களது அரிய ஆராய்ச்சியிற் கண்ட பொருள்களை வரையாது உதவி வருகின்றார்கள். நாயனார் அவதரித்த மனையிடம் - சிவபாதவிருதயர் வழிபட்ட கோயில் இவற்றைப் படம் எடுத்து, சீகாழி - அன்பர் M.T. விசுவநாத செட்டியார் அவர்கள் உதவினார். இவ்வெல்லாப் பெருமக்களுக்கும் என் நன்றி உரித்தாகுக. | பெரியபுராணவுரை வெளியீட்டுக் கென்று பொதுவாக ரூ. 1000 (ஆயிரம் வெண் பொற்காசுகள்) மனமுவந்து திருப்பனந்தாள் காசிமடத்தின் அதிபர், காசிவாசி, ஸ்ரீமத் அருணந்தித் தம்பிரான் சுவாமிகள் மனமுவந்து அனுப்பியருளி ஆசி புரிந்தருளினார்கள். அதுபற்றியும் அடியேனது நன்றியறிதலுடன் எனது பெரு வணக்கத்தினையும் அறிவித்துக்கொள்கிறேன். பொள்ளாச்சி தாலுக்கா தென் சித்தூர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தருமபரிபாலகர்கள் ரூ. 100 (நூறு) உரை வெளியீட்டுக்கு நன்கொடை அளித்தனர்; அவர்களுக்கும் எனது நன்றி உரியது. இனித், திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் மகாசந்நிதானம், ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண பண்டார சந்நிதி அவர்கள் இப் புராண |
|
|