50நான்காம் பகுதியின் முன்னுரையின் முற்பகுதி

வெளியீட்டுக்குப் பலவகையாலும் அவ்வப்போது பேருதவி புரிந்தருளுவதாக அன்புகூர்ந்து வாக்களித்ததுமன்றி, ஒரு பாகம் உதவியும் புரிந்தும், ஆசி செய்தருளியுள்ளார்கள். "காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல வூரர்க் கம்பொன், ஆயிரங் கொடுபபர் போலு மாவடு துறைய னாரே" (தேவா) என்றபடி இஃது அத் திருமரபுக்கு அடிப்படையில் வந்த பெருமையன்றோ? அதுபற்றி அடியேனது நன்றியும் வணக்கமும் தெரிவித்துக் கொள்வதுடன் அடுத்த சஞ்சிகையில் விவரமான அறிவிப்பையும் தெரிவித்துக்கொள்வேன்.
     ஒரு தகுதியுமில்லாத அடியேனையும் ஆளாகக்கொண்டு தமது அரும் பெருஞ்சரிதத்தின் பணி புரியத் தண்ணருள் புரிந்த பெருந்தகை திருஞானசம்பந்த நாயனாரது திருவடிகளை வணங்குகின்றேன்.
 
"அரும்பின வன்பில்லை; யர்ச்சனை யில்லை; யரனடியே
 விரும்பின மாந்தர்க்கு மெய்ப்பணி செய்கிலன்; பொய்க்கமைந்த
 இரும்பின வுள்ளத்தி னேற்கெங்ங னேவந்து நேர்பட்டதாற்
 கரும்பன நீள்வயல் சூழ்காழி நாடன் கழலடியே"
 
என்ற நம்பியாண்டார் நம்பிகளது திருவாக்கு எப்போதும் என் நினைவினுள் வருகின்றது.
கோவை,
சேக்கிழார் நிலையம்
7-1-1947
          அடியார்க்கடியேன்
C. K. சுப்பிரமணிய முதலியார்