திருத்தொண்டர் புராணமும் - உரையும்51

முன் சேர்க்கை - 2
திருமுறைகளின் இச்சரிதப் பகுதியின் ஆதரவு
     ஆளுடைய பிள்ளையார் புராணம் பற்பல பகுதிகளுக்கும் சைவ தெய்வத் திருமுறைகளின் சரித ஆதரவு காணலாம். அவற்றுள் இப்பகுதியைப் பற்றிய சிலவற்றை, ஈண்டுத் தருகின்றேன். ஏனைய பகுதிகளைப் பற்றியவற்றை ஆங்காங்குக் குறிக்க எண்ணியுள்ளேன்.
தேவாரம் :-
"போதையார் பொற்கிண்ணத் தடிசில்பொல் லாதெனத்
  தாதையார் முனிவுறத் தானெனை யாண்டவன்"
- பிள்ளையார் - தேவாரம்
11-ம் திரு முறை :-
".....உலக மூன்றுக்குங் களைக ணாகி,
 முதலில் கால மினிதுவீற் றிருந்துழித்
பட்டினத்துப் பிள்ளையர்:-
தாதையோடு வந்த வேதியச் சிறுவன்,
தளர்நடைப் பருவத்து வளர்பசி வருத்த,
"அன்னா யோ"வென் றழைப்பமுன் னின்று,
ஞான போனகத் தருளட்டிக் குழைத்த
ஆனாத் திருளை யவன்வயி னாருள,
வந்தணன் முனிந்து தந்தா ரியா?ரென,
அவனைக் காட்டுவ னப்ப! வானார்
தோடுடைய செவிய னென்றும்
பீடுடைய பெம்மா னென்றுங்
கையிற் சுட்டிக் காட்ட,
ஐயநீ வெளிப்பட் டருளினை யாங்கே."
- திருக்கழுமல மும்மணிக்கோவை 1
நம்பியாண்டார் நம்பிகள் :-
......அம்மென் குதலைச் செவ்வாய்,
பைய மிழற்றும் பருவத்துப் பாடப் பருப்பதத்தின்
றைய லருள்பெற் றனனென்பர் ஞானசம் பந்தனையே.
- திருத்தொண்டர் திருவந்தாதி 33
"......வேதத் தலைவன் மெல் விரலாற்,
 றோட்டியல் காத னிவனென்று தாதைக்குச் சூழ்விசும்பிற்,
 காட்டிய கன்று..........."
- ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி 13
"இருந்தண்புகலி.....போனகம்..........அரனளித்த,
 பெருந்தகை............"
- மேற்படி 40
 துளிவந்த கண்பிசைந் தேங்கலு மெங்க ளரன்றுணையாங்
 கிளிவந்த சொல்லிபொற் கிண்ணத்தில் ஞான வமுதளித்த"
- மேற்படி 78