|
"குஞ்சிகூடாப் பருவத்துக் குன்றவில்லி, |
பங்குதங்கும் மங்கை தன்னருள் பெற்றவன்"......... |
- திருச்சண்பை விருத்தம் - 2 |
"ஞானத்திரளையிலே யுண்டனை..........என்று" |
- ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை - 12 |
".......அமுதுண்டு செவ்வா யருவி தூங்க............" |
- மேற்படி 19 |
"...எஞ்சாமை, யாதிச் சிவனருளாலம்பொன் செய்வட் டிலினிற், |
கோதி லமுதுநுகர் குஞ்சரத்தை............" |
- ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை |
"..........ஈங்கருளி யெம்போலவார்க் கிடர்கெடுத்தல் காரணமா |
ஓங்குபுகழ்ச் சண்பையெனு மொண்பதியு ளுதித்தனையே |
செஞ்சடைவெண் மதியணிந்த சிவனெந்தை திருவருளால் |
வஞ்சியன நுண்ணிடையாண் மலையரையன் பொற்பாவை |
நற்கண்ணி யளவிறந்த ஞானத்தை யமிர்தாக்கிப் |
பொற்கிண்ணத் தருள்புரிந்த போனகமுன் னுகர்ந்தனையே |
தோடணிகா தினனென்றுந் தொல்லமரர்க் கெஞ்ஞான்றுந் |
தேடரிய பராபரனைச் செழுமறையி னகன்பொருளை |
யந்திச்செம் மேனியனை யடையாளம் பலசொல்லி |
உந்தைக்குக் காணவர னுவனாமென் றுரைத்தனையே |
- ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் - 1 |
"......மலைமா துமையொடு மிகவனா வானென முன்னா ளுரை |
செய்தவன்......" |
- மேற்படி - 7 |
"பண்டமுது செய்துமை நங்கை யருண்மேவு சிவஞானம்" |
- மேற்படி - 9 |
"பூவார் திருநுதன்மேற் பொற்சுட்டி யிட்டொளிரக் |
கோவாக் குதலை சிலம்பரற்ற - வோவா |
|
"தழுவான் பசித்தா"னென் றாங்கிறைவன் காட்டத் |
தொழுவான் றுயர்தீர்க்குந் தோகை - வழுவாமே |
|
முப்பத் திரண்டறமுஞ் செய்தாண் முதிராத |
செப்பொத்த கொங்கைத் திருநுதலி - யப்பன். |
|
அருளாலே யூட்டுதலு மப்பொழுதே ஞானத் |
திரளாகி முன்னின்ற செம்மல் - இருடீர்ந்த |
|
காழி முதல்வன் கவுணியர்தம் போரேறு |
"ஊழி முதல்வ னுவ"னென்று காட்டவலான்.........." |
- ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை |
குறிப்பு :- பிள்ளையார் சீகாழிப் பதியில் அவதரித்தமையும், அந்தணர் மரபில் கவுணிய கோத்திரத்தில் வந்தமையும் அவரது பல பதிகங்களிலும் திருமுறைகளிலும் காணத்தக்கன. "கழுமல வூரர்க்கு" (அரசுகள், நேரிசை.) மிகவும் பார்க்க. |