ஓம் குஹாய நம: திருப்புகழ் விரிவுரை விநாயகர் துதி கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி கப்பிய கரிமுக னடிபேணிக் கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ கற்பக மெனவினை கடிதேகும் மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன் மற்பொரு திரள்புய மதயானை மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டவிழ் மலர்கொடு பணிவேனே முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம் அச்சது பொடிசெய்த அதிதீரா அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும் அப்புன மதனிடை யிபமாகி அக்குற மகளுட னச்சிறு முருகனை அக்குண மணமருள் பெருமாளே. பதவுரை கைத்தலம் - திருக்கரத்திலே, நிறைகனி - நிறைந்தகனியையும், அப்பமொடு அவல்பொரி - அப்பத்தோடு அவல்பொரிகளையும், கப்பிய-உண்ணுகின்ற, கரிமுகன்-யானை முகத்தையுடைய விநாயகப் பெருமானது, அடிபேணி- திருவடிகளை விரும்பி, கற்றிடும் அடியவர் - (அறிவு நூல்களை) ஓதுகின்ற அடியாரது, புத்தியில் உறைபவ-அறிவினிடத்தில் கலந்துவாழ்கின்றவரே! கற்பகம்-கற்பகத்தருவைப்போல் அடியவர் நினைத்தவையனைத்தும் அருளவல்லவரே! முத்தமிழ் அடைவினை-மூன்று தமிழின் முறையினை, முற்படு கிரிதனில்- |