லாக நாதமீறாயுள்ள உலகங்களான பஞ்ச கலைகளுக்கும் உட்பட்ட மந்திரம், பதம், வன்னம், தத்துவம், புவனம் என்னும் சொற் பொருட் பிரபஞ்சங்களை எல்லாம் ஒரு நொடிக்குள் வலம் வந்து திருக்கயிலையை நோக்கினார். யாவராயினு மிக்கனி விழைந்துளோர் கணத்திற் பூவலங்கொடு வருதிரே லவர்க்கெனப் புகலத் தூவியம்பசுந் தோகைமா மஞ்ஞைமேற் றோன்றித் தேவர்சேனைகா வலன்கிரி யிழிந்துபார் சேர்ந்தான். -பழநித் தலபுராணம். “செகமுழுது முன்புதும்பி முகவனொடு தந்தைமுன்பு திகிரிவலம் வந்த செம்பொன் மயில்வீரா” -(அனைவரு) திருப்புகழ் “இலகுகனி கடலைபய றொடியல்பொரி யமுதுசெயும் இலகுவெகு கடவிகட தடபாரமேருவுடன் இகலிமுது திகிரிகிரி நெரியவளை கடல்கதற எழுபுவியை யொருநொடியில் வலமாக வோடுவதும்” -சீர்பாத வகுப்பு. “ஆரமதுரித்தகனி காரணமுதற் றமைய னாருடனுணக்கைபுரி தீமைக்காரனும் ஆகமம் விளைத்தகில லோகமு நொடிப்பளவில் ஆசையொடு சுற்றுமதி வேகக்கரனும்” -வேளைக்காரன் வகுப்பு. “வாரணமுகன் தனது தாதையை வலஞ்சுழல வாகைமயில் கொண்டுலகு சூழ்நொடி வருங்குமரன்” -பூதவேதாள வகுப்பு. உலகங்கள் முழுவதும் ஒரு நொடிப்பொழுதில் சுற்றிவருவதற்குள் மலைகளெத்தனை? கடல்களெத்தனை? திக்கு யானைகள் திக்கு நாகங்களெத்தனை? திசைப்பாலகர்கள் எத்தனையர்? சூரிய சந்திர அக்கினி வாயு மேகங்கள் நட்சத்திரங்கள் எவ்வளவின? பிரமவிட்டுணுக்களும் சத்தியலோக வைகுண்டங்களும், இந்திரர்களும், சுவர்க்கங்களும் உருத்திரர்களும் புவனங்களும் எண்ணிறந்தவரும் எண்ணிறந்தவையுமாகும். யாவரையும் யாவற்றையுங் கண்டு கண்டு செல்ல அவர்களும் இவரை அஞ்சலிசெய்து வணங்கியுள்ளார்கள். இது எங்ஙன முடியுமெனின்? |