|
கொடுத்து அவனை வேறாக
ஒதுக்கி விட்டு, எவ்வுயிர்க்கும் தாயாய் - எல்லா
வுயிர்களுக்கும் அன்னையாய், பள்ள நீர் அகிலம் காத்து - கடல் சூழ்ந்த
நிலவுலகினைப் புரந்து, பல்வளம் பழுக்க வாழ்ந்தான் - பல வளங்களும்
சிறக்க வாழ்ந்தனன்.
பிறர்
செய்த தீங்கினைப் பொறுத்ததன்றி அவர்க்கு உதவி செய்யவும்
முற்பட்டா னாகலின் வள்ளல் என்றார். தம்பி யாதற்குத் தக்கவனல்ல
னென்பார் தம்பி யென்னும் என்றார். மாற்றி - அவனுக்குரியதாகச் செய்து.
எல்லா வுயிர்களிடத்தும் தலையளி யுடையவனாய் என்பார் எவ்வுயிர்க்குந்
தாயாய் என்றார். (37)
ஆகச்
செய்யுள் 1855.
|