பக்கம் எண் :

280திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



பன்னிரண்டனுள் ஒன்று; மேற்குக் கடலோரத்தில் உள்ளது. பசுமை தமிழுக்கு
அடை; தமிழ் மொழியானது மென்மையும் ஒண்மையும் இனிமையும் வளமையும் செம்மையும் சீர்மையும் உடையதாய் விளங்குதலால் இதனைச் சான்றோர்கள்
பலவாறு அடையடுத்து வழங்குவாராயினர் என்க. தூவி என்பது
விகாரமாயிற்று. பூவணம் - பாண்டி நாட்டிலுள்ள தேவாரம் பெற்ற பதினான்கு
திருப்பதிகளிலொன்று. இருப்பது - இருக்கும் இடனாவது. (2)

எண்ணி லங்குறை சராசர மிலிங்கமென் றெண்ணி
விண்ணி னாள்களுங் கோள்களும் விலங்குவ தியாக்கைக்
கண்ணி னான்கதிர் முதற்பல கடவுளர் பூசை
பண்ணி வேண்டிய நல்வர மடைந்ததப் பதியில்.

     (இ - ள்.) அங்கு உறை எண் இல் சர அரசம் - அங்கு வசிக்கும்
இளவற்ற சரா சரங்களனைத்தும், இலிங்கம் என்று எண்ணி - சிவலிங்க
மூர்த்தமென்று கருதி, விண்ணின் நாள்களும் கோள்களும் விலங்குவது -
வானின்கணுள்ள நாண்மீன்களும் நவக்கோள்களும் விலகிச் செல்லப்
பெறுவது; ஆக்கைக் கண்ணினான் கதிர் முதல் பல கடவுளர் - உடலில்
கண்களையுடைய இந்திரனும் சூரியனு முதலிய பல தேவர்கள், பூசை
பண்ணி - வழிபட்டு, வேண்டிய நல்வரம் அடைந்தது - தாம் விரும்பிய
நல்ல வரங்களை அடையப்பெற்றது; அப்பதியில் - அத்தன்மை வாய்ந்த
அந்நகரில்,

     எண்ணில் சராசரங்களையும் என்றியைத்து விரிக்க. சிவலிங்க மாகத்
தோன்றுதலின் எண்ணி விலங்குவவாயின; பதியின் மேன்மை கூறியவாறு.
பூவணநகரம் விளங்கப்பெறுவது, அடையப்பெற்றது என்க. (3)

கிளியு ளார்பொழிற் பூவணக் கிழவர்தங் கோயிற்
றளியு ளார்தவப் பேறனா டாதுகு பூந்தார்
அளியு ளார்சூழ லணங்கனா ளந்தரத் தவர்க்குங்
களியு ளார்தர மயக்குறூஉங் கடலமு தனையாள்.

     (இ - ள்.) கிளி உள் ஆர் பொழில் பூவணக் கிழவர்தம் - கிளிகள்
உள்ளே நிறைந்துவாழும் சோலைசூழ்ந்த திருப்பூவண நாதருடைய, கோயில
தளியுளார் தவப்பேறு அனாள் - திருக்கோயிற் பணிபுரியும்
உருத்திரகணிகையர் தவப்பயன்போலும் ஒரு நங்கை உளள்; தாது உகு
பூந்தார் உள் அளி ஆர் குழல் அணங்கு அனாள் - அவள் மகரந்தஞ்
சிந்தும் மலர்மாலையுள் வண்டுகள் பொருந்தி இசைபாடுங் கூந்தலை யுடைய
அணங்கினை யொப்பாள்; அந்தரத்தவர்க்கும் - தேவர்கட்கும். களிஉள்
ஆர்தர - உள்ளத்திற் களிப்புமிக, மயக்குறூஉம் - மயக்குகின்ற, கடல்
அமுது அனையாள் - கடலிற் றோன்றிய அமுதம்போல்வாள். (4)

நரம்பி னேழிசை யாழிசைப் பாடலு நடநுல்
நிரம்பு மாடலும் பெண்ணல நீர்மையும் பிறவும்
அரம்பை மாதரை யொத்தன ளறனெறி யொழுகும்
வரம்பி னாலவர் தமக்குமே லாயினிாண் மன்னோ.