பக்கம் எண் :

முதற் காண்டம்1

தேம்பாவணி
 

     இயேசு நாதரின் வளர்ப்புத் தந்தையாகிய சூசைமா முனிவன்
வரலாற்றைக் காப்பியமாகக் கூறும் இந்நூலுக்கு வீரமாமுனிவர் இட்ட
பெயர் தேம்பாவணி.
'தேம்பா அணி' எனப் பிரிந்து 'வாடாத மாலை'
எனவும்,
'தேன் பா அணி' எனப் பிரிந்து 'தேன் போன்ற
பாக்களாலான மாலை
' எனவும் இது காரணப் பொருள் பெறும்.
சிந்தாமணிக் காப்பியத் தலைவனாகிய சீவகனும் சிந்தாமணி என
வாழ்த்தப் பெற்று அதனையே காப்பியப் பெயராகவும் கொண்டது
போல்,
''ஆடா நிலை அறத்து என் மார்பில் தேம்பாவணி ஆவான்,''
என (3 : 57), ஆண்டவனே குரல் கொடுத்துச் சூசையைப்
போற்றியமையால், அதுவே காப்பியப் பெயராக அமைந்ததென்றும்
கொள்ளலாம்.

பாவுரை பதிகம்
 

     முனிவரின் மாணவன் ஒருவன் தேம்பாவணிக்கு உரை
எழுதினான். அவ்வுரைக்குப் பதிகமாக இது அமைந்துள்ளது
'பா உரை
பதிகம்
' எனப் பிரிந்து, பாவுக்கு எழுதிய உரைக்குப் பதிகம் எனப்
பொருள் விரியும். பதிகம் என்பது முன்னுரை. அதற்கு மறு பெயர்
பாயிரம். அது நூலாசிரியன் செய்ததாயின்
'தற்சிறப்புப் பாயிரம்'
எனவும், பிறன் செய்ததாயின்
'சிறப்புப் பாயிரம்' எனவும் பெயர்
பெறும். எனவே, இது சிறப்புப் பாயிரம் என்க. இது ஆக்கியோன்
பெயர் முதலிய பலவற்றைக் கற்பார்க்கு அறிமுகப்படுத்தும் நோக்கங்
கொண்டு அமைவது.

                    ஆசிரியப்பா

                   உரைநோக்கம்

          தேம்பா வணிஎன, செயிர்அற அவதரி
          காம்பா அருள்உள கடவுளை வளர்க்க
          உயர்கைத் தாதையென்று உடைவளத்து உரிவளன்
          பெயர்பெறும் சூசை பெரும்பயன் சரிதை,
          செய்யுளும் உரைத்த செய்யுளோடு இசைப்படச்    
5


     1. தேம்பாவணி - வளனுக்குச் சிறப்புப் பெயர். செயிர் - பாவம்.
     2. காம்பா - கெடாத.