'தோன்றின'
என்ற இறந்தகால வினைமுற்றின் 'இன்' இடைநிலை
செய்யுள் ஓசைப் பொருட்டு விகாரத்தால் தொக்கது. அவ்வாறன்றி 'தோன்ற'
என வினையெச்சமாகக் கொண்டு, குளகப் பாட்டாய், அடுத்த பாடலோடு
இணைத்து முடிப்பதும் ஒன்று.
2
|
போர்பு
றங்கொடு, பொருந்தல ருரத்திறேய்த்
தொளிர்வேற்
சீர்பு றங்கொடு திசைதொறு மிருளற மின்னி
வார்பு றங்கொடு வளர்முர சொலியென வதிர்ந்து
நீர்பு றங்கொடு நீன்முகில் முழங்கின மாதோ. |
|
போர்
புறம் கொடு, பொருந்தலர் உரத்தில் தேய்த்து,
ஒளிர்
வேல்
சீர் புறம் கொடு, திசை தொறும் இருள் அற மின்னி,
வார் புறம் கொடு வளர் முரசு ஒலி என அதிர்ந்து,
நீர் புறம் கொடு நீல் முகில் முழங்கின மாதோ. |
நீரைத் தம்மிடத்தே
கொண்டு நீல நிறம் பெற்ற மேகங்கள், பகைவரது
மார்பில் செலுத்திப் போரில் அவர் புறமிடக்கொண்டு ஒளிரும் வேலின்
சீரைத் தம்மிடத்தே கொண்டு, திசை தோறும் இருள் கெடுமாறு மின்னின;
கட்டிய வாரைப் புறத்தே கொண்டு வெற்றி வளர்க்கும் முரசின் ஒலி போல
இடித்து முழங்கின.
புறம் இடல் - முதுகு காட்டுதல்; தோற்றல். நீல் - 'நீலம்' என்பதன்
கடைக்குறை. நீலமும் கருமையும் ஒரே நிறமாகக் கொள்ளப்படுதல்
நூல் மரபு.
3
|
படையெ
னச்செருப் பகைதரப் படர்ந்தன வல்லாற்
கடையெ னச்செறி கருணையோ டுஞற்றிய வள்ளர்
கொடையெ னச்செழுங் குன்றொடு வயின்றொறுங் குளிர
மிடையெ னச்சொரி வியன்முகில் வரையில பொழிவ.
|
|
படை
எனச் செருப் பகை தரப் படர்ந்தன அல்லால்,
கடை எனச் செறி கருணையோடு உஞற்றிய வள்ளர்
கொடை என, செழுங் குன்றொடு வயின் தொறும் குளிர
மிடை எனச் சொரி வியன் முகில் வரைவு இல பொழிவ. |
|