செறிந்த தன்மையாய்
நீரைச் சொரியும் பெரிய மேகங்கள், போரில்
பகையை விளைவிக்கத் தோற்றத்தினால் படைபோல் எங்கும் பரவினவே
அல்லாமல், இறுதியில், செறிந்த கருணையோடு செய்த வள்ளல்களின்
கொடை போல், செழுமையான மலையோடு மற்றுள்ள இடந்தோறும்
குளிருமாறு அளவில்லாது மழையைப் பொழிவனவாம்
ஆற்று
வளம்
4 |
படித்த
நூலவை பயன்பட விரித்துரைப் பவர்போ
றடித்த நீன்முகில் தவழ்தலை பொலிந்தபொன் மலையே
குடித்த நீரெலாங் கொப்புளித் தமுதென வருவி
யிடித்த றாவொலி யெழத்திரை யெறிந்துருண் டிரிவ. |
|
படித்த
நூல் அவை பயன்பட விரித்து உரைப்பவர் போல்,
தடித்த நீல் முகில் தவழ் தலை பொலிந்த பொன் மலையே
குடித்த நீர் எலாம் கொப்புளித்து, அமுது என அருவி
இடித்து, அறா ஒலி எழத்திரை எறிந்து உருண்டு இரிவ. |
தாம் படித்த நூலைப்
பிறருக்குப் பயன்படுமாறு சபையில்
விரித்துரைப்பவர் போல், நீரால் தடித்த கரிய மேகம் தவழும் சிகரத்தோடு
பொலிந்த அழகிய மலையும் தான் மழையால் முன் குடித்த நீரையெல்லாம்
கொப்புளிக்கும். அந்நீர் அமுதம் போன்ற அருவியாக மலைமீது இடித்துப்
பாய்ந்து, அறாத ஒலி எழுமாறு அலை அடிக்க உருண்டு ஆறாக ஓடும்.
5
|
புள்ளி
மால்வரை பொன்னுல கிடத்தெடுத் துய்த்த
லுள்ளி வான்விடும் வடமெனத் தாரைக ளொழுக
வெள்ளி நீண்டொடர் விசித்ததைப் பிடித்தெனச் சூழத்
துள்ளி வீழுயர் தூங்கிய வருவியின் றோற்றம். |
|
புள்ளி
மால் வரை பொன்னுலகு இடத்து எடுத்து உய்த்தல்
உள்ளி வான் விடு வடம் எனத் தாரைகள் ஒழுக,
வெள்ளி நீண் தொடர் விசித்து அதைப் பிடித்து என, சூழத்
துள்ளி வீழ் உயர் தூங்கிய அருவியின் தோற்றம் |
|