பக்கம் எண் :

முதற் காண்டம்283

     "மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் ஒருங்கே வணங்குகின்ற
வானுலகில் வீற்றிருக்கும் ஆண்டவன், உண்மையைச் சார்ந்த தன்
உள்ளத்தால் அருள் செய்யக் கருதி, என் மனப் புன்மை நீங்குமாறு,
பொய்யையெல்லாம் அகற்றிய அழகிய அணி கலன் போன்ற உன்னை,
வெம்மை சிறிதும் இல்லாத துணைவியாக எனக்கு ஈந்தான். இச்செயலை
இருள் மொய்த்த என் மனத்தால் முற்றும் உணர்ந்து, அடியேன்
செய்யக்கூடிய கைம்மாறு ஏதேனும் உண்டோ?"

 
                            9
மொய்ப்படுவெண் டிரையாழி மூழ்கியெழும் பதங்கனது
செய்ப்படுவெங் கதிர்தாங்கித் தெளிந்தத்தங் கதிர்விடும்போற்
கைப்படுநன் றுளமேய்ந்து கைம்மாறாய் நன்றுசெயு
மெய்ப்படுநன் முறைநீயே விதித்தருள்தி யென்றறைந்தான்.
 
 மொய்ப் படு வெண் திரை ஆழி மூழ்கி எழும் பதங்கனது
செய்ப் படு வெங் கதிர் தாங்கித் தெளிந்து அத்தம் கதிர் விடும்
                                        போல்,
கைப் படு நன்று உளம் ஏய்ந்து, கைம்மாறாய் நன்று செயும்
மெய்ப் படு நல் முறை நீயே விதித்து அருள்தி." என்று                                         அறைந்தான்.

     "மொய்த்த வெண்ணிற அலைகளையுடைய கடலில் இரவு மூழ்கிக்
காலையில் உதித்தெழும் கதிரவனின் செந்நிறமுள்ள வெப்பமான
கதிர்களைக் கண்ணாடி ஏற்றுக்கொண்டு தெளிவடைந்து தானும்
அக்கதிர்களை வெளிவிடுவதுபோல், என் கைக்குக் கிட்டியுள்ள
நன்மையை உள்ளத்தில் கொண்டிருந்து, அதற்குப் பதில் நன்றியாய்
நன்மை செய்வதற்கு உரிய மெய்யோடு பொருந்திய நல்ல வழியை நீயே
எனக்குக் கட்டளையிட்டருள்வாய்," என்று கூறினான்.
 
                             10
இன்னிசையுங் கோற்றேனு மின்கனியுங் கழைப்பாகும்
பன்னிசையும் பாகூறும் பணியாழு மாங்குயிலு
மன்னவையும் நாணவினி தஞ்சொனலா ளுண்ணாணிக்
சொன்னவைகொண் டுணர்வுரைப்பத் துணிந்துதுவர்
                              வாய்மலர்ந்தாள்.