பக்கம் எண் :

முதற் காண்டம்282

                     7
உற்றவா றுளத்திலறி வுறாதுற்ற துணிவோங்கிச்
சொற்றவா றறியேனேற் றுகட்டுடைத்த வெந்தைவரம்
பெற்றவா றுரைத்ததற்கே பிரியாதோர் கைம்மாறு
முற்றவா றிவட்கேட்பே னெனவளன்முன் மொழிகொண்டான்.
 
உற்ற ஆறு உளத்தில் அறிவு உறாது, உற்ற துணிவு ஓங்கி,
'சொற்ற ஆறு அறியேனேல், துகள் துடைத்த எந்தை வரம்
பெற்ற ஆறு உரைத்து, அதற்குப் பிரியாது ஓர் கைம்மாறும்
உற்ற ஆறு இவட் கேட்பேன்,' என வளம் முன் மொழி                                       கொண்டான்:

     அது தன் உள்ளத்தில் வந்து புகுந்த விதத்தைத் தான் அறியாமலே,
அதனால் கொண்ட துணிவு மட்டு மேலோங்கி, "சொல்ல வழி
அறியேனாயினும், என் மன மாசுகளைத் துடைத்த என் தந்தையாகிய
ஆண்டவனிடம் நான் இந்த வரம் பெற்ற விதத்தை இவளுக்கு எடுத்துரைத்து,
அதற்கு மாறுபடாத ஒரு பதில் நன்றியாக அமைந்த ஒரு வழிமுறைபற்றி
இவளையே கேட்பேன்," எனக் கருதி, சூசை முன் பேசத் தொடங்கினான்.

     சொற்ற - சொல்ல: 'சொற்று' பகுதியாகக் கொண்டு அமைத்த 'செய'
என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம்.
 
                           8
வையகத்தார் வானகத்தார் வணங்குகின்ற வானிறையோன்
மெய்யகத்தா லருளுணர்ந்து வெய்தரிய துணைவியெனப்
பொய்யயகற்றா யிழையுன்மைப் புன்மையற வெனக்கீதல்
மொய்யகத்தா லுணர்ந்தடியேன் முயலுங்கைம் மாறுண்டோ.
 
"வையகத்தார் வானகத்தார் வணங்குகின்ற வான் இறையோன்
மெய் அகத்தால் அருள் உணர்ந்து, வெய்து அரிய துணைவி
                                        எனப்
பொய் அகற்று ஆய் இழை உன்னைப் புன்மை அற, எனக்கு
                                        ஈதல்
மொய் அகத்தால் உணர்ந்து, அடியேன் முயலும் கைம்மாறு
                                        உண்டோ?"