பக்கம் எண் :

முதற் காண்டம்281

     "தானாய் நிலைபெறும் ஆண்டவனே, ஒப்பில்லாத துணைவனை
எனக்குத் தந்து, நான் கொண்டுள்ள கன்னிமையை அவன் காப்பானென்று,
நீரெல்லாம் சென்று சேரும் கடல் போல் அலைந்த என் மனத்துக்கு உறுதி
தந்தருளினாய். வெப்பம் அடையாமல் மனம் குளிருமாறு, நீ கட்டளையிட்ட
தெல்லாம் வெளியாகும்படி, தப்புக்கு இடமில்லாத ஒரு வழியையும் நீயே
அருள்வாய்." என்று வேண்டினாள்.

     ஆர்கலி - 'ஓசை நிறைந்தது என கடலுக்குக் காரணப் பெயர்.
 
                           6
வளமாளுந் திருமடந்தை வருத்தங்கண் டிரக்குறிவான்
றளமாளு மரசென்பான் றவிர்க்கரிய வயத்தன்மைத்
துளமாளு முறைதன்னா லுரையாது முளந்தூண்டி
யளமாளு மலர்க்கொடியோ னாய்ந்தறையத் துணிவீந்தான்.
 
வளம் ஆளும் திரு மடந்தை வருத்தம் கண்டு, இரக்கு உறி,
                                  வான்
தளம் ஆளும் அரசு என்பான், தவிர்க்கு அரிய வயத்
                                  தன்மைத்து
உளம் ஆளும் முறை தன்னால், உரையாதும் உளம் தூண்டி,
அளம் ஆளும் மலர்க் கொடியோன் ஆய்ந்து அறையத்
                                  துணிவு ஈந்தான்.

     தெய்வ அருள் வளத்தைச் செல்வமாகக் கொண்டு ஆளும்
பெண்ணாகிய மரியாளின் வருத்தம் கண்டு, வானுலகப் படையாகிய
வானவர்களை ஆளும் அரசன் எனப்படும் ஆண்டவன் இரக்கம் கொண்டு,
விலக்கற்கு அரிய, தன் வல்லபத் தன்மையோடு உள்ளங்களையெல்லாம்
ஆண்டுநடத்தும் நல்லமுறையால், சொல்லாமலே உள்ளத்தைத் தூண்டி,
நெருக்கம் கொண்ட மலர்கள் பூத்த கொடியை உடைய சூசையே தனக்குள்
ஆராய்ந்து பேசுவதற்குரிய துணிவைக் கொடுத்தான்,

     
தவிர்க்கு + அரிய தவிர்க்கவரிய என வர வேண்டியது, தவிர்க்கரிய
எனத் தொகுத்தல் விகாரம் கொண்டது.