பக்கம் எண் :

முதற் காண்டம்280

                    4
மின்னியதா ரகைமுடியின் விளங்கரிய காட்சியினாற்
றுன்னியதோ ராவிபடத் தூயபளிங் காசுறுமென்
றுன்னியதா லாடவரோ டுரைப்பறியா மடவாளும்
மன்னியதார்த் துணையொடுந்தன் மனங்காட்ட
                               நாணுவளாம்.
 
மின்னிய தாரகை முடியின் விளங்கு அரிய காட்சியினால்,
துன்னியது ஓர் ஆவி படத் தூய பளிங்கு ஆசு உறும் என்று
உன்னியதால், ஆடவரோடு உரைப்பு அறியா மடவாளும்,
மன்னியதார்த் துணையொடும் தன் மனம் காட்ட
                                  நாணுவள்ஆம்.

     தான் அணிந்துள்ள விண்மீன்களாலாகிய முடியைப் போல் விளங்கும்
அரிய அறிவினால், அணுகிய ஓர் ஆவி தன் மேல் பட்டாலும் தூய
கண்ணாடி களங்கமடையும் என்று கருதியமையால், ஆடவரோடு பேசி
யறியாத இளம் பெண்ணாகிய மரியாளும், திருமண மாலையால் தனக்கு
நிலைபெற்ற துணைவனாகிய சூசையிடமுமே தன் மனக் கருத்தைத் திறந்து
காட்ட நாணுவாள் ஆயினாள்.
 
                     5
ஒப்படையாத் துணைதந்தே யுடைக்கன்னி காப்பானென்
றப்படையார் கலியென்ன வலைந்தமனத் துரஞ் செய்தாய்
வெப்படையா மனங்குளிர விதித்ததெலாம் வெளியாகுந்
தப்படையா முறையருள்தி தற்பரனே யெனத் தொழுதாள்.
 
"ஒப்பு அடையாத் துணை தந்தே, உடைக் கன்னி காப்பான்
                                          என்று,
அப்பு அடை ஆர்கலி என்ன அலைந்த மனத்து உரம்
                                          செய்தாய்;
வெப்பு அடையா மனம் குளிர, விதித்தது எலாம் வெளியாகும்
                                          தப்பு
அடையா முறை அருள்தி தற்பரனே!" எனத் தொழுதாள்.