| சூசையின்
கடவுள் வாழ்த்து
- விளம், -
மா, - விளம், - மா, - விளம், - விளம், - மா
|
34
|
அறக்கட னீயே
யருட்கட னீயே யருங்கரு ணாகர னீயே
திறக்கட னீயே திருக்கட னீயே திருந்துள மொளிபட ஞான
நிறக்கட னீயே நிகர்கடந் துலகி னிலையுநீ யுயிருநீ
நிலைநான்
பெறக்கட னீயே தாயுநீ யெனக்குப் பிதாவுநீ யனைத்துநீ
யன்றோ. |
| |
"அறக் கடல்
நீயே; அருள் கடல் நீயே; அருங் கருணாகரன்
நீயே;
திறக் கடல் நீயே; திருக் கடல் நீயே; திருந்து உளம் ஒளிபட
ஞான
நிறக் கடல் நீயே; நிகர் கடந்து, உலகின் நிலையும் நீ; உயிரும்
நீ; நிலை நான்
பெறக் கடல் நீயே; தாயும் நீ எனக்கு; பிதாவும் நீ அனைத்தும்
நீ அன்றோ?" |
"அறத்தின் கடலாய்
இருப்பவனும் நீயே; அருளின் கடலாய்
இருப்பவனும் நீயே; அரிய கருணைக்கு இருப்பிடமானவனும் நீயே;
வல்லமையின் கடலாய் இருப்பவனும் நீயே; செல்வக் கடலாய் இருப்பவனும்
நீயே; திருந்திய மக்களின் உள்ளம் ஒளி பெறுமாறு ஞான அழகின் கடலாய்
இருப்பவனும் நீயே; ஒப்புமையெல்லாம் கடந்து நின்று, இவ்வுலகின்
நிலைக்களனாய் இருப்பவனும் நீயே; அதன் உயிராய் இருப்பவனும் நீயே;
நான் நிலைபெறக் கடல்போல் நின்று தாங்குபவனும் நீ எனக்குத் தாயாய்
இருப்பவனும் நீ; தந்தையாய் இருப்பவனும் நீயே; அனைத்தும் நீயே
அல்லவா?"
கருணாகரன் -
கருணை + ஆகரன் = கருணைக்கு இருப்பிடமானவன்.
|
35
|
கார்த்திரள்
மறையாக் கடலினுண் மூழ்காக் கடையிலா
தொளிர்பரஞ் சுடரே
நீர்த்திரள் சுருட்டி மாறலை யின்றி நிலைபெறுஞ்
செல்வநற் கடலே
போர்த்திரள் பொருதக் கதுவிடா வரணே பூவனந்
தாங்கிய பொறையே
சூர்த்திரள் பயக்கு நோய்த்திரள் துடைத்துத்
துகட்டுடைத் துயிர்தரு மமுதே. |
|